Last Updated:
New Income Tax Bill | வரி செலுத்துவோரின் சமூக ஊடக சுய விவரங்கள், மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், ஆன்லைன் முதலீடு மற்றும் வர்த்தகக் கணக்குகள் ஆகியவற்றைத் தேடுவதற்கு வருமான வரித்துறைக்கு சட்டப்பூர்வ அதிகாரங்களை வழங்குவதாகக் புதிய வருமான வரி மசோதாவில் கூறப்படுகிறது.
புதிய வருமான வரிச்சட்டம், அடுத்த ஆண்டு முதல் நாட்டில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த மசோதாவில் செய்யப்பட்ட பல மாற்றங்களில், ஒரு மாற்றமானது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சில அதிகாரங்களை வழங்குகிறது. இது வரி செலுத்துவோரின் சமூக ஊடக சுய விவரங்கள், மின்னஞ்சல்கள், வங்கிக் கணக்குகள், ஆன்லைன் முதலீடு மற்றும் வர்த்தகக் கணக்குகள் ஆகியவற்றைத் தேடுவதற்கு வருமான வரித்துறைக்கு சட்டப்பூர்வ அதிகாரங்களை வழங்குவதாகக் கூறப்படுகிறது.
தற்போதைய வருமான வரிச் சட்டம் 1961இன் படி, வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சில அதிகாரங்கள் வழங்கப்படும். அதாவது, உங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் அல்லது வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளீர்களா என்பது குறித்து சந்தேகப்பட்டால், வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தவும், பணம், தங்கம், நகைகள் மற்றும் நிதி ஆவணங்கள் போன்ற சொத்துக்களை பறிமுதல் செய்யவும் அதிகாரம் பெற்றுள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவரும் புதிய வருமான வரி மசோதாவில் இது தொடர்பான விதிகள் இணைக்கப்பட்டுள்ளன. பணப் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் ஏதேனும் மறைக்கப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டால், கதவுகள் மற்றும் லாக்கர்களை உடைக்கவும் ஐடி அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.
வரி செலுத்துவோர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தாலும் அல்லது மின்னஞ்சல் அல்லது சமூக ஊடக கணக்கு விவரங்களைக் கேட்கும்போது வழங்கத் தயங்கினாலும், அதிகாரிகள் கணக்கின் பாஸ்வேர்டை தவிர்த்து, பாதுகாப்பு அமைப்புகளை மீறி, கணக்குகளை ஆக்சஸ் செய்ய அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள்.
புதிய வருமான வரி மசோதாவின் 247வது பிரிவின் கீழ், வரி ஏய்ப்பு அல்லது வெளியிடப்படாத சொத்துகள் குறித்து சந்தேகம் இருந்தால், தனி நபர்களின் மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள், வங்கி விவரங்கள் மற்றும் முதலீட்டுக் கணக்குகளை அணுக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. சுருக்கமாகச் சொல்லப் போனால், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வரி செலுத்துவோரின் ‘விர்ச்சுவல் டிஜிட்டல் ஸ்பேஸில்’ சேமித்து வைக்கப்பட்டுள்ள அனைத்தையும் இலவசமாக அக்சஸ் செய்யலாம்.
புதிய விதி குறித்து நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். “புதிய மசோதா தற்போதைய வருமான வரிச் சட்டத்தில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றமாகும்” என்று நங்கியா ஆண்டர்சன் எல்எல்பியின் விஸ்வாஸ் பன்ஜிர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவில் கிரிப்டோ கரன்சி வளர்ச்சியடைந்து வருவதால், வரி ஏய்ப்பாளர்கள் டிஜிட்டல் பொருளாதாரத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்வதை இந்தத் திட்டம் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: Home insurance | பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு ஹோம் இன்சூரன்ஸ் உதவுமா…? பாலிசிதாரர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன…?
இந்த நவீன அணுகுமுறை வரி ஏய்ப்பை கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும் என்றாலும், அது தனியுரிமை மற்றும் டேட்டா பாதுகாப்பு பற்றிய கவலைகளை எழுப்புகிறது. தனி நபர்கள் தங்கள் வரித் தாக்கல்கள் துல்லியமானவை என்பதை உறுதிசெய்து, தங்கள் வருமானம் மற்றும் முதலீடுகளை முழுமையாக வெளிப்படுத்துமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
March 07, 2025 3:55 PM IST


