• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || வவுனியா இரட்டை கொலை: பிணை வழங்க உத்தரவு

GenevaTimes by GenevaTimes
March 7, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || வவுனியா இரட்டை கொலை: பிணை வழங்க உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




  க. அகரன்


வவுனியா, தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் விளக்கமறியலை நீடிக்க போதுமான காரணம் இன்மையால் பிணை வழங்கலாம் என வவுனியா மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  


வவுனியா, தோணிக்கல் பகுதியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 23 ஆம் திகதி அதிகாலை வீடு புகுந்து தாக்குதல் நடத்தி பெட்ரோல் ஊற்றி எரியூட்டப்பட்ட சம்பவத்தில் கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவர் மரணமடைந்திருந்தனர். 


குறித்த இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்த துடன், அவர்கள் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.


குறித்த வழக்கு விசாரணை வவுனியா மேல் நீதிமன்றில் புதன்கிழமை (05) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரதான சந்தேக நபரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி டபிள்யூ.ஆர்.டி சில்வா ஆஜராகி சந்தேக நபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணை கோரி பிணை மனு சமர்ப்பித்தார். 


அதை மறுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்ட வாதிகளால் பிணை வழங்குவதற்க்கு மறுப்புத் தெரிவித்து விளக்கமறியலை நீடிக்குமாறு  வாதங்கள் முன்வைக்கப்பட்டன.


இவற்றை கவனம் செலுத்திய மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹால் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் பிணை மறுப்புக்கு விசேட காரணங்கள் முன்வைக்கப்படாமையால் கைது செய்யப்பட்டவர்களுக்கான விளக்கமறியலை நீடிக்க காரணம் போதாமையால் குறித்த சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கலாம் என உத்தரவிட்டார்.



Read More

Previous Post

Saravanan mahu Zamri Vinoth ditangkap | Makkal Osai

Next Post

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி மீது புதிய வழக்குகள் பதிய உச்ச நீதிமன்றம் தடை | SC stays new FIRs against Udhayanidhi over Sanatan Dharma remarks

Next Post
சனாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி மீது புதிய வழக்குகள் பதிய உச்ச நீதிமன்றம் தடை | SC stays new FIRs against Udhayanidhi over Sanatan Dharma remarks

சனாதன தர்மம் குறித்து சர்ச்சை கருத்து: உதயநிதி மீது புதிய வழக்குகள் பதிய உச்ச நீதிமன்றம் தடை | SC stays new FIRs against Udhayanidhi over Sanatan Dharma remarks

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin