Last Updated:
பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தேசிய கல்வி கொள்கை என்பது அனைத்து தரப்பு மாணவர்களின் பள்ளிக் கல்வி தரத்தை மேம்படுத்தவும், ஏழை, எளிய பள்ளி மாணவர்கள் அனைத்து இந்திய மொழிகளை இலவசமாக கற்க வேண்டும் என்ற நோக்கத்தோடும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்தை, அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள், இந்தி திணிப்பு என்ற பொய்யான காரணத்தைக் காட்டி ஏற்க மறுப்பதாக” குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால், சம்பந்தப்பட்ட பள்ளி குழந்தைகளின் அடிப்படை உரிமையான இலவச கல்வி மறுக்கப்படுவதாகவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, தேசிய கல்வி கொள்கையான மும்மொழி பாடத்திட்டத்தை அமல்படுத்த சம்பந்தப்பட்ட 3 மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
March 06, 2025 10:09 PM IST
மும்மொழி பாடத்திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்… உச்சநீதிமன்றத்தில் பாஜக மனு

