• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘நோன்பு இருக்காமல் முகமது ஷமி பாவம் செய்துவிட்டார்’ – முஸ்லிம் மவுலானா காட்டம் | Mohammed Shami committed sin by not fasting says cleric

GenevaTimes by GenevaTimes
March 6, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘நோன்பு இருக்காமல் முகமது ஷமி பாவம் செய்துவிட்டார்’ – முஸ்லிம் மவுலானா காட்டம் | Mohammed Shami committed sin by not fasting says cleric
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பரேலி: புனித ரமலான் மாத நோன்பினை நோற்காமல் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பாவம் செய்துள்ளார் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத்தின் தேசியத் தலைவரான மவுலானா சஹாபுத்தீன் ரஸ்வி பரேல்வி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் முக்கிய கடமை ஆகும். இது ஷரியத் விதியின்படி இஸ்லாமியர்கள் அவசியம் பின்பற்ற வேண்டி உள்ளது. ஒருவர் வேண்டுமென்றே நோன்பு நோற்காமல் இருந்தால் அவர் பாவியாகக் கருதப்படுவார். அந்த வகையில் நோன்பு நோற்காத இந்திய கிரிக்கெட் வீரர் ஷமி பாவி ஆகியுள்ளார். அவர் இதை செய்திருக்க கூடாது.

கிரிக்கெட் விளையாடுவது தவறு இல்லை. ஆனால், ஷமி தனது மத சம்பிரதாயங்களை கடைபிடித்திருக்க வேண்டும். இனியாவது அவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது” என மவுலானா சஹாபுத்தீன் ரஸ்வி பரேல்வி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மவுலானா சஹாபுத்தீன் ரஸ்வி பரேல்வி வெளியிட்டுள்ள வீடியோவில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான போட்டியின்போது ஷமி நீர் ஆகாரம் பருகியதை பார்த்ததாக கூறியுள்ளார். அவரது இந்தக் கருத்துக்கு பாஜகவை சேர்ந்த மொஹ்சின் ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். “இது அல்லாவுக்கும், தனிப்பட்ட ஒருவருக்கும் இடையிலானது. இதில் கருத்து கூற மவுலானா சஹாபுத்தீன் ரஸ்வி பரேல்விக்கு உரிமை இல்லை. ஷமி தற்போது தேசத்துக்காக விளையாடி வருகிறார். இந்தச் சூழலில் அவர் இப்படி செயல்பட இஸ்லாம் அனுமதிக்கிறது” என மொஹ்சின் ராசா கூறியுள்ளார்.

34 வயதான ஷமி, நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார். 4 போட்டிகளில் 32 ஓவர்கள் வீசி 159 ரன்கள் கொடுத்து 8 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி உள்ளார். காயத்தில் இருந்து மீண்ட அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

கர்நாடக பாடகியை கரம்பிடித்தார் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா!

Next Post

அமேசான் பிரைமில் AI டப்பிங் வசதியா…?

Next Post
அமேசான் பிரைமில் AI டப்பிங் வசதியா…?

அமேசான் பிரைமில் AI டப்பிங் வசதியா...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin