பிகார் மாநிலத்தின் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
பாட்னா பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தல் இன்னும் சில நாள்களில் அங்கு நடைபெறவுள்ள நிலையில் இன்று (மார்ச்.5) பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் தர்பாங்கா கட்டடத்தின் அருகிலுள்ள பொருளாதாரத் துறையின் நூலகத்தின் வாசலில் பயங்கர சத்ததுடன் குண்டு வெடித்தது. இதனால் உண்டான அதிர்வில் நூலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளும் ஆசிரியர் ஒருவரின் காரின் கண்ணாடிகளும் உடைந்து சிதறின.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த பிராபாஹோர் காவல் துறையினர், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கான காரணம் குறித்து தங்களது விசாரணையைத் துவங்கியுள்ளனர். மாணவர் சங்கத் தேர்தலில் தங்களது ஆளுமையை காண்பிக்க சில மாணவர் குழுக்களினால் இது நிகழ்த்தப்பட்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 வீரர்கள் படுகாயம்!

