• Login
Thursday, May 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: ஆஸி.க்கு எதிராக எப்படி இருந்தது இந்திய பவுலிங்? | Champions Trophy semi final team India s bowling against Australia

GenevaTimes by GenevaTimes
March 4, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி: ஆஸி.க்கு எதிராக எப்படி இருந்தது இந்திய பவுலிங்? | Champions Trophy semi final team India s bowling against Australia
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாய்: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிக்கு முன்னேறியது.

துபாயில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் பலம் பேட்டிங்தான். அதன் காரணமாக இந்த முடிவை ஆஸ்திரேலியா எடுத்தது.

இந்திய அணி நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்தப் போட்டியில் விளையாடியது. துபாய் ஆடுகளம் மெதுவாக பந்து வீசும் பவுலர்களுக்கு பெரிதும் ஒத்துழைப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா சொல்லி இருந்தார். அதன்படி குல்தீப், வருண், அக்சர், ஜடேஜா ஆகியோர் ஆடும் லெவனில் இடம்பெற்றனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகம் வலது கை பேட்டர்கள் இருந்த காரணத்தால் இந்த முடிவு என்றும் சொல்லலாம்.

அரை இறுதி ஆட்டத்தின் முதல் ஓவரை ஷமி வீசினார். அந்த ஓவரில் டிராவிஸ் ஹெட் பேட்டில் பட்டு லீடிங் எட்ஜ் ஆன பந்தை போதுமான டைமிங் இல்லாத காரணத்தால் அதை ஷமி மிஸ் செய்தார். இருப்பினும் இந்த இன்னிங்ஸில் ஹெட் வசம் லக் இருந்தது. இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் இளம் வீரர் கான்லி விக்கெட்டை வீழ்த்தினார் ஷமி.

தொடர்ந்து ஸ்மித் களத்துக்கு வந்தார். அதுவரை அமைதி காத்த ஹெட், அதிரடி மோடுக்கு மாறினார். 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக், ஷமி பந்து வீச்சை துவம்சம் செய்தார். ஷமி வீசிய இன்னிங்ஸின் 5-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார்.

ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை தடுக்கும் விதமாக 9-வது ஓவரில் வருண் சக்கரவர்த்தியை கேப்டன் ரோஹித் பந்து வீச செய்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் ஹெட் விக்கெட்டை வருண் வீழ்த்தினார். அதன் மூலம் ஸ்மித், ஹெட் கூட்டணி முடிவுக்கு வந்தது.

அடுத்து வந்த லபுஷேன், ஸ்மித் உடன் விக்கெட்டை விடாமல் ‘தட்டி தட்டி’ ரன்களை சேர்த்தார். இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்தனர். அதன் பலனாக அவர்களும் 50+ ரன்கள் கூட்டணி அமைத்தனர். 36 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் லபுஷேனை ஜடேஜா எல்பிடபிள்யூ முறையில் வெளியேற்றினார். தொடர்ந்து இங்கிலிஸையும் ஜடேஜா அவுட் செய்தார். பின்னர் அலெக்ஸ் கேரி உடன் இணைந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் ஸ்மித்.

96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்து வீச்சில் ஸ்மித் போல்ட் ஆனார். அதற்கு முன்பு வரை ஆஸ்திரேலியா 300+ ரன்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஸ்மித் விக்கெட் அதை மாற்றியது. மேக்ஸ்வெல் வந்த வேகத்தில் வெளியேறினார். அக்சர் படேல் அவரது விக்கெட்டை கைப்பற்றினார்.

அதிரடியாக ஆடி ரன் குவித்த கேரியை ரன் அவுட் செய்து ஸ்ரேயாஸ் வெளியேற்றினார். அவர் 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். 49.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆனது ஆஸி. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் 34 ஓவர்களை மொத்தம் வீசி இருந்தனர். மொத்தம் 176 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் ஜடேஜா மற்றும் வருண் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்சர் 1 விக்கெட் கைப்பற்றினார். வேகப்பந்து வீச்ச்சை பொறுத்தவரையில் ஷமி 10 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியா வெற்றி – இந்தப் போட்டியில் 264 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது இந்திய அணி. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். கில், 8 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 29 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்து 91 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஸ்ரேயாஸ், 62 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஸாம்பா பந்தில் அவர் போல்ட் ஆனார். அக்சர் படேல் 27 ரன்கள் எடுத்தார்.

கே.எல்.ராகுல் விரைந்து ரன் குவித்தார். கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பெரிய ஷாட் ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் மூலம் சதம் விளாசும் வாய்ப்பை அவர் மிஸ் செய்தார். ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தார். மூன்று சிக்ஸர்களை அவர் விளாசி ஆட்டத்தில் அழுத்தத்தை குறைத்தார். 48.1 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று நியூஸிலாந்து அல்லது தென் ஆப்பிரிக்காவை இறுதி ஆட்டத்தில் இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.



Read More

Previous Post

‘அய்யா வைகுண்டர் போதித்த வழி நடந்து மனிதம் காப்போம்’.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!

Next Post

பிகேஆர் பிரிவு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து போலீசார் விசாரணை – Malaysiakini

Next Post
பிகேஆர் பிரிவு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து போலீசார் விசாரணை – Malaysiakini

பிகேஆர் பிரிவு கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பம் குறித்து போலீசார் விசாரணை – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin