• Login
Monday, June 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

அபுதாபியில் இந்தியப் பெண்ணிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.. மத்திய அரசு தகவல்!

GenevaTimes by GenevaTimes
March 4, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
அபுதாபியில் இந்தியப் பெண்ணிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்.. மத்திய அரசு தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 04, 2025 7:54 AM IST

ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையை கொன்ற வழக்கில், இந்தியப் பெண் ஷாஷாதி கானுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் செய்ததாக தெரிவித்துள்ளது.

News18News18
News18

ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையைக் கொன்ற வழக்கில், இந்தியப் பெண்ணிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டில், உத்தரப்பிரதேச மாநிலம், பாண்டா நகரைச் சேர்ந்த ஷாஷாதி கான் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் 4 வயது குழந்தையை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டார். டிசம்பர் மாதத்தில் அந்தக் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதாகத் தெரிகிறது. இதில், குழந்தை உயிரிழந்த நிலையில், ஷாஷாதி கான் கொலை செய்துவிட்டதாகக் கூறி அபுதாபி காவலர்கள் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த அபுதாபி நீதிமன்றம், ஷாஷாதி கானுக்கு மரண தண்டனை வழங்கி கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது.

மரண தண்டனையைத் தடுத்து நிறுத்துமாறு வெளியுறவுத்துறையிடம் பல முறை மனு கொடுத்த ஷாஷாதி கானின் தந்தை, டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கடந்த மாதம் 15-ஆம் தேதி, ஐக்கிய அரபு அமீரக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷாஷாதி கானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

Also Read | Summer Heat | தமிழ்நாட்டில் அதிகரித்த வெயிலின் தாக்கம்.. மக்களுக்கு சுகாதாரத் துறை முக்கிய அட்வைஸ்!

அவரைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அப்பெண்ணிற்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருந்ததால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்தது. மேலும், அந்தப் பெண்ணின் இறுதிச்சடங்கு நாளை நடைபெற உள்ளதாகவும், அதுகுறித்த தகவலை அவரது குடும்பத்தினருக்குத் தெரிவித்து விட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

March 04, 2025 7:50 AM IST

Read More

Previous Post

வடைக்குள் சட்டை ஊசி

Next Post

IND v AUS | 14 ஆண்டுகால ‘நாக் அவுட்’ சோகம்.. வரலாற்றை மாற்றி எழுதுமா இந்தியா? – இன்று முதலாவது அரையிறுதி!

Next Post
IND v AUS | 14 ஆண்டுகால ‘நாக் அவுட்’ சோகம்.. வரலாற்றை மாற்றி எழுதுமா இந்தியா? – இன்று முதலாவது அரையிறுதி!

IND v AUS | 14 ஆண்டுகால 'நாக் அவுட்' சோகம்.. வரலாற்றை மாற்றி எழுதுமா இந்தியா? - இன்று முதலாவது அரையிறுதி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin