Last Updated:
ஓலா எலெக்ட்ரிக் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
இழப்புகளைச் சரிகட்டும் நடவடிக்கையாக ஓலா எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனம், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
சார்ஜிங் உள்கட்டமைப்பு, வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள்தான் இந்த ஆட்குறைப்பில் பெரியளவில் பாதிக்கப்பட இருக்கின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்கனவே 500 ஊழியர்களை ஓலா நிறுவனம் பணிநீக்கம் செய்தது. கடந்த ஆண்டு மார்ச் நிலவரப்படி ஓலா நிறுவனத்தில் 4 ஆயிரம் பணியாளர்கள் பணியாற்றி வந்தனர்.
இது மட்டுமின்றி, ஏராளமான ஒப்பந்த ஊழியர்களும் ஓலாவில் பணியாற்றி வருகின்றனர். வணிகம் குறைந்ததை அடுத்து ஒப்பந்த ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளையும் ஓலா நிறுவனம் மேற்கொண்டது. பிப்ரவரி மாதத்தில் மட்டும் 25 ஆயிரம் மின்சார வாகனங்களை அந்நிறுவனம் விற்றுள்ளது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் வாகனங்களில் பழுது அதிகரிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது அந்நிறுவனத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
March 03, 2025 10:13 PM IST


