இந்த நிலையில் தான் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக துபாயில் நடைபெறுகிறது. அதன்படி, இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட லீக் போட்டி துபாய் மைதானத்தில் கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்றது.
அந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணியை இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வீழ்த்தியது. இந்த வெற்றி, இந்தியா – பாகிஸ்தான் போட்டியில், இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்ற கருத்துக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக், இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 10 டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி, ‘ஒரு நல்ல கிரிக்கெட் நாடாக’ தங்கள் இடத்தைப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்று வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்.
இதுபோல பல வடிவ தொடர்கள் நடந்தால், இரு அணிகளில் எந்த அணி சிறந்தது என்பது குறித்து உண்மை நிலவரம் வெளிவரும் என்று முஷ்டாக் கூறினார். மேலும் அவர் கூறியபோது, “நாம் அரசியல் விஷயங்களை ஒதுக்கி வைத்தால், அவர்கள் (இந்தியா) வீரர்கள் சிறந்தவர்கள். அவர்கள் நல்ல கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிக்க: ஐபிஎல் தொடரில் இனி புதிய மாற்றங்கள்..! அணிகள் பயிற்சி செய்ய புதிய கட்டுப்பாடுகள்
இது குறித்து செய்திச் சேனலில் அவர் பேசும்போது, “நீங்கள் உண்மையிலேயே ஒரு நல்ல அணியாக இருந்தால், எங்களுக்கு எதிராக 10 டெஸ்ட் போட்டிகள், 10 ஒருநாள் போட்டிகள், 10 டி20 போட்டிகளை விளையாடுங்கள், அதில் யார் சிறந்தவர் என்பது தெளிவாகிவிடும். நாம் (பாகிஸ்தான்) நன்கு தயாராகி சரியான முடிவுகளை எடுத்தால், இந்தியாவிற்கும் உலகிற்கும் உறுதியான பதிலடி கொடுக்க முடியும்” என்று சக்லைன் முஷ்டாக் தெரிவித்தார்.
பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாமல், சொந்த மண்ணில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. பாகிஸ்தானில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நடைபெற்ற ஐசிசி தொடரில் இப்படி ஒரு தோல்வியை அந்நாட்டு ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட்டை முழுமையாக சீரமைக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.
Saqlain Mushtaq’s challenge
If u are truly a good team, play 10 Test matches, 10 ODIs,10 T20Is against us and it will become clear (who is the best). If we (Pakistan) prepare well and make the right decisions, we will be able to give a solid response to India and the world.” pic.twitter.com/TsNupIklDX— Varun Giri (@Varungiri0) March 1, 2025
ஏற்கனவே 2024 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை என சமீபத்தில் நடைபெற்ற தொடர்களிலிருந்து முன்கூட்டியே வெளியேறிய பிறகு, பாகிஸ்தான் அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக அரையிறுதிக்குத் தகுதி பெறத் தவறியது ரசிகர்களின் ஆதங்கத்திற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
March 02, 2025 6:56 PM IST

