அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சந்திப்புதான் நேற்று( பிப்ரவரி 1) முழுவதும் டாக் ஆஃப் தி வொர்ல்டு ஆக இருந்தது. இந்நிலையில், அந்த சந்திப்புக்கு ஜெலன்ஸ்கி கோட் சூட் அணியாமல் வந்தது பேசுபொருளாகியிருக்கிறது. கனிமவள ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் சந்தித்திருந்தார். அந்த சந்திப்பிற்கு ஜெலன்ஸ்கி கோட் சூட் அணிந்து வரமால் சாதாரண உடையை அணிந்து வந்திருந்தார்.
அப்போது, செய்தியாளர் ஒருவர் நீங்கள் ஏன் கோட் சூட் அணிந்து வரவில்லை . இந்த நாட்டின் உயரிய மதிப்புமிக்க அலுவலகத்துக்கு வந்துள்ளீர்கள் என்று தெரியதா? உங்களிடம் கோட் சூட் இல்லையா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு பதிலளித்த ஜெலன்ஸ்கி, “ போர் நிறுத்தப்பட்டால், வேறு உடை அணிவேன். அந்த ஆடை, சிறப்பானதாகவும், ஏன் உங்களை போன்று கோட் சூட்டாகவும் கூட இருக்கலாம் ” என்று தெரிவித்திருந்தார். மேலும் டொனால்டு ட்ரம்ப்பும் ஜெலன்ஸ்கியின் ஆடை குறித்து வஞ்சப்புகழ்ச்சியுடன் பேசியிருந்தார்.

