Last Updated:
ரிதேஷ் குமார் என்பவர் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் இருந்த பயணி மீது கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார்.
யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலம் அடைவதற்காக இளைஞர் ஒருவர் ரயில் பயணியின் கன்னத்தில் பளார் என்று அடித்துள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில் அவரை கைது செய்து ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்பின்னர் தனது தவறை ஒப்புக் கொண்டு அவர் கெஞ்சிய வீடியோ ஒன்று கவனம் பெற்று வருகிறது.
சமூக வலைதளங்களில் அதிக விருப்பங்களை பெறுவதற்காக சமீப காலமாக சில யூசர்கள் அத்துமீறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் மீது தொடர்ந்து அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அசம்பாவிதங்கள் அவ்வப்போது நடந்து விடுகின்றன.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் விரும்பத் தகாத சம்பவம் ஒன்று நடந்தது. இங்கு அவுரங்காபாத் மாவட்டம் அனுக்ரக நாராயண் ரயில் நிலையத்தில், ரிதேஷ் குமார் என்பவர் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த ரயிலில் இருந்த பயணி மீது கன்னத்தில் பளார் என்று அறைவிட்டார். இது தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் பயணிகளின் பாதுகாப்பு குறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதுபற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்த ரயில்வே போலீசார் சம்பந்தப்பட்ட ரிதேஷ் குமாரை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். நடந்த சம்பவத்திற்கு ரிதேஷ் குமார் மன்னிப்பு கேட்டு கெஞ்சி மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் ”நான் ஒரு யூடியூபர், இன்ஸ்டாகிராமில் எனது ஃபாலோயர்சை அதிகரிக்க செய்வதற்காக வீடியோக்களை பதிவிடுகிறேன். ரயில்வே நிலையத்தில் வந்து கொண்டிருந்த ரயிலில் இருந்த பயணியை நான் தாக்கினேன். எனது சமூக வலைதளங்களில் ஃபாலோயர்சை அதிகரிப்பதற்காக நான் செய்தேன். இது என்னுடைய தவறு. இதை மீண்டும் செய்ய மாட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
No compromise on passenger security !!
A YouTuber who slapped a passenger on a moving train for social media fame has been tracked & arrested by #RPF Dehri-on-Sone! pic.twitter.com/4KckhrCyPy
Your safety matters to us—reckless acts will not be tolerated.#PassengerSafety #RPFAction… pic.twitter.com/2h00IQPTKj
— RPF INDIA (@RPF_INDIA) February 27, 2025
முன்னதாக ரிதேஷ் குமார் தாக்கிய வீடியோ வைரலான நிலையில் அது குறித்து, நெட்டிசன்கள் தினேஷ் குமாரின் சமூக வலைத்தளக் கணக்குகளை முடக்க வேண்டும் என்றும் அவரை சோசியல் மீடியாவை பயன்படுத்த அனுமதிக்க கூடாது எனவும் வலியுறுத்தி இருந்தனர்.
March 02, 2025 2:07 PM IST


