Last Updated:
லீக் சுற்றின் கடைசி ஆட்டம் இன்று துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு பெறவுள்ள நிலையில் அரையிறுதி சுற்றில் இந்தியாவில் இந்தியாவுடன் எந்த அணி மோதும் என்பது இன்று தெரிந்துவிடும்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இவை குரூப் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவுகளிலும் 4 அணிகள் இடம் பெற்றிருந்தன. இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் பிரிவு A யிலும் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்று இருந்தன.
லீக் சுற்று போட்டிகளின் அடிப்படையில் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து அணிகளும் B பிரிவில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. இருப்பினும் அரையிறுதியில் எந்த அணி மோதும் அணிகள் குறித்த விபரம் என்னும் உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் லீக் சுற்றின் கடைசி ஆட்டம் இன்று துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும்.
அதேநேரம் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தால் அரையிறுதி சுற்றில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடும். முதல் அரை இறுதி போட்டி நாளை மறுதினம் செவ்வாய் அன்றும், இரண்டாவது அரையிறுதி போட்டி வரும் புதன் அன்றும் நடைபெறுகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9 ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
March 02, 2025 7:02 AM IST


