• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஏளனம் செய்த டிரம்ப்.. பதிலடி கொடுத்த பிரேசில் அதிபர்.. முடிவுக்கு வரும் டாலர் ஆதிக்கம்?

GenevaTimes by GenevaTimes
March 1, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஏளனம் செய்த டிரம்ப்.. பதிலடி கொடுத்த பிரேசில் அதிபர்.. முடிவுக்கு வரும் டாலர் ஆதிக்கம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 01, 2025 3:50 PM IST

பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர உறுதியாக உள்ளன. டிரம்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, மாற்று பணத்தை பயன்படுத்துவோம்.

News18News18
News18

பிரிக்ஸ் அமைப்பு காணாமல் போய்விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்த நிலையில், அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் பிரிக்ஸ் நாடுகள் உறுதியாக உள்ளதாக பிரேசில் அதிபர் லூலா டா சில்வா கூறியுள்ளார்.

BRICS என்ற சொல்லாடல் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் சுருக்கம் ஆகும். அந்த அமைப்பில் 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிரேசில், ரஷ்யா இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்க நாடுகளைத் தவிர எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் அந்த அமைப்பில் உள்ளன. சவூதி அரேபியா உறுப்பு நாடாக இணைய பரிசீலித்து வருகிறது.

2023-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின்போது, டாலருக்கு மாற்றாக வேறு ஒரு பண மதிப்பில் பிரிக்ஸ் நாடுகள் வர்த்தகம் செய்ய வேண்டும் என ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தியிருந்தார்.

இதனை மற்ற நாடுகளும் ஏற்றுக் கொண்டு அதனை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற டெனால்ட் டிரம்ப், டாலருக்கு மாற்றை கொண்டு வர நினைத்தால், அந்நாடுகள் மீது 150 சதவிகித வரி விதிக்கப்படும் என்றும், தற்போது பிரிக்ஸ் அமைப்பு மரணித்து விட்டது எனவும் ஏளனம் செய்திருந்தார்.

டிரம்பின் எச்சரிக்கையை பொருட்படுத்தாத பிரேசில் அதிபர் லூலா டா சில்வா, அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் பிரிக்ஸ் நாடுகள் உறுதியாக உள்ளதாக கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்க அதிபரின் வரிவிதிப்பு எச்சரிக்கை, டாலருக்கு மாற்றை கொண்டு வரும் முயற்சியை தடுத்து நிறுத்தாது என கூறியுள்ளார். டாலரை தான் பயன்படுத்த வேண்டும் என அமெரிக்கா நிர்பந்தித்தால், அது அந்நாட்டுக்கே தீங்கிழைக்கும் என ஏற்கெனவே ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்திருந்தார்.

தற்போது ஐரோப்பிய நாடுகள், யூரோ என்ற பணத்தின் மூலம் வர்த்தகத்தை நடத்தி வருகின்றன. ரஷ்யா- சீனா இடையே, 95 சதவிகித வர்த்தகம் அந்நாடுகளின் ரூபிள் மற்றும் யுவானில் நடைபெறுகின்றன. அர்ஜென்டினா, பிரேசில், கானா, மலேசியா உள்ளிட்ட நாடுகளும் தங்கள் பணத்தின் மூலமாகவே பெரும்பான்மையான வணிகத்தை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

First Published :

March 01, 2025 3:50 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஏளனம் செய்த டிரம்ப்.. பதிலடி கொடுத்த பிரேசில் அதிபர்.. முடிவுக்கு வரும் டாலர் ஆதிக்கம்?

Read More

Previous Post

Champions Trophy : இங்கிலாந்தை எளிதாக வென்றது தென்னாப்பிரிக்கா.. செமி ஃபைனலுக்குள் என்ட்ரி

Next Post

தெலுங்கானா: மண் சரிவில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு | Makkal Osai

Next Post
தெலுங்கானா: மண் சரிவில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு | Makkal Osai

தெலுங்கானா: மண் சரிவில் சிக்கிய 8 பேரும் உயிரிழப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin