வந்தாராவின் துணை நிறுவனமான கிரீன்ஸ் ஜூலாஜிக்கல் ரிஸ்க் அண்ட் ரிஹாபிலிசேஷன் சென்டர் (GZRRC), அழிந்து வரும் ஸ்பிக்ஸ் மக்கா வகையான கிளியை மீட்டெடுத்து, பிரேசிலில் உள்ள காட்டிங்கா பயோமில் மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அக்டோபர் 2022இல் கைவிடப்பட்ட பல அரிய விலங்குகளை GZRRC மீட்டது. இதுவரை 200க்கும் மேற்பட்ட விலங்குகள் மீட்கப்பட்டுள்ளன.
வந்தாராவில் மீட்கப்பட்டு மறுவாழ்வு பெற்ற விலங்குகளின் கதைகளை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
(பஞ்சம்) புலி: மனித-வனவிலங்கு மோதலில் காயமடைந்த Panjam என்ற புலிக்கு ORIF அறுவை சிகிச்சை, பிசியோதெரபி மற்றும் சிறப்பு உணவு வழங்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது.
(ஜிம்பாவின் குடும்பம்) காட்டு நாய்கள்: காட்டுத் தீயில் இருந்து தப்பி வந்த எட்டு காட்டு நாய்கள் வந்தாராவில் மீட்கப்பட்டு, காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்றன.
காண்டாமிருகம்: இறந்த தாயின் அருகில் கண்டெடுக்கப்பட்ட குட்டி காண்டாமிருகத்திற்கு, கொலஸ்ட்ரம், பால் மாற்று, புரோபயாடிக்குகள் மற்றும் 24 மணிநேர கண்காணிப்பு வழங்கப்பட்டு காப்பாற்றப்பட்டது.
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என்ற மசாய் சிங்கங்கள் சிறையில் அடைத்து வளர்க்கப்பட்டு வந்த நிலையில், வந்தாராவில் விடுவிக்கப்பட்டு, இயற்கையான சூழலில் வாழ பழகி வருகின்றன.

(டாடியா) சிலந்தி குரங்கு: ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் மன அழுத்தத்தில் இருந்த Tatiya என்ற சிலந்தி குரங்குக்கு சிறப்பு சிகிச்சை மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
(ஃபரிதா) ஒகாபி: காலில் காயம் பட்டு வலியில் துடித்து கொண்டிருந்த Farida என்ற ஒகாபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, ஆரோக்கியமான இரட்டைக் குட்டிகளைப் பெற்றெடுக்க உதவினார்கள்.
இரண்டு கால் சோம்பல்: மின்சாரம் தாக்குதலில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கால் சோம்பலுக்கு 24 மணி நேர கவனிப்பு மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்பட்டது.
ஆர்ட்வார்க்: மூடநம்பிக்கையால் தாக்கப்பட்ட ஆர்ட்வார்க்கிற்கு சிறப்பு பராமரிப்பு, சரியான ஊட்டச்சத்து மற்றும் இயற்கையான சூழல் வழங்கப்படுகிறது.
(ராஜா, ராணி மற்றும் ராதா) கொலோபஸ் குரங்குகள்: வாழ்விட அழிவிலிருந்து மீட்கப்பட்ட கொலோபஸ் குரங்குகளுக்கு சிறப்பு கவனிப்பு மற்றும் இயற்கையான சூழலை ஒத்த வாழ்விடம் வழங்கப்படுகிறது.
(பிங்கி மற்றும் ஜக்கு) பிக்மி ஹிப்போபொட்டமஸ்: மோசமான நிலையில் இருந்த பிக்மி நீர்யானைகளுக்கு மருத்துவம், பராமரிப்பு மற்றும் நீர் ஆதரவு வழங்கப்பட்டது.
(மீனு) மாபெரும் நீர்நாய்: சட்டவிரோத இடத்திலிருந்து மீட்கப்பட்ட மீன் என்ற நீர்நாய்க்கு சிறுநீரக தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, இரண்டு ஆரோக்கியமான குட்டிகளைப் பெற்றெடுக்க உதவினார்கள்.
March 01, 2025 6:32 PM IST

