மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தது தொடர்பாக பதிலளிக்குமாறு பாஜக எம்.பி திலிப் கோஷ்-க்கு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக-வுக்கும் இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மூத்த தலைவரும், எம்.பி.,-யுமான திலிப் கோஷ், கோவா-வுக்கு செல்லும்போது கோவா-வின் மகள் என்றும், திரிபுரா-வுக்கு செல்லும்போது திரிபுராவின் மகள் என்றும் மம்தா பானர்ஜி பேசுவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மம்தா-வின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்திலும் பாஜக எம்.பி-க்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திலிப் கோஷுக்கு பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், இதுபோன்ற பேச்சுக்கள், கட்சியின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், இந்தப் பேச்சு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
