• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் | tuhin Kanta Pandey appointed as SEBI chairman

GenevaTimes by GenevaTimes
March 1, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் | tuhin Kanta Pandey appointed as SEBI chairman
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) புதிய தலைவராக மத்திய நிதித் துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய செபி தலைவர் மாதவி புரி புச்சின் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து செபியின் புதிய தலைவராக மத்திய நிதித் துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்ட அரசாணையில், “மத்திய நிதி, வருவாய் துறை செயலாளர் துஹின் காந்தா பாண்டேவை செபி தலைவராக நியமிக்க மத்திய அமைச்சரவை நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் நீடிப்பார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 1987-ம் ஆண்டு ஒடிசா பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான துஹின் காந்தா பாண்டே மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி உள்ளார்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளநிலை பட்டம் பெற்ற பாண்டே, பிரிட்டனின் பிர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பரில் மத்திய நிதித் துறை செயலாளராக அவர் பதவியேற்றார். மத்திய பட்ஜெட்டை தயார் செய்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார். கடந்த ஜனவரி 9-ம் தேதி வருவாய் துறையின் செயலாளராகவும் அவர் பொறுப்பேற்றார். ஏர் இண்டியா நிறுவனத்துக்கு டாடா குழுமத்துக்கு விற்பனை செய்ததில் துஹின் காந்தா பாண்டே முக்கிய பங்காற்றினார்.



Read More

Previous Post

கேரளாவை 342 ரன்களுக்கு மடக்கி முன்னிலை பெற்றது விதர்பா அணி | Vidarbha takes lead after bowling out Kerala for 342 runs

Next Post

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்: குடிபோதையில் செய்த கொடூரம் | Makkal Osai

Next Post
5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்: குடிபோதையில் செய்த கொடூரம் | Makkal Osai

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்: குடிபோதையில் செய்த கொடூரம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin