Last Updated:
துஹின் காந்தா பாண்டே செபி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் முதுநிலை முடித்து, யு.கே.வில் எம்.பி.ஏ. முடித்தவர்.
இந்தியப் பங்குப் பரிவர்த்தனை அமைப்பின் (செபி) தலைவராக மாதபி பூரி புச் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது மத்திய அரசின் நிதித்துறை செயலராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துஹின் காந்தா பாண்டே இந்தியப் பங்குப் பரிவர்த்தனை அமைப்பின் (செபி) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், துஹின் காந்தா பாண்டே 11வது செபி தலைவராக ஆகியுள்ளார்.
சண்டிகரில் இருக்கும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் முதுநிலை முடித்த துஹின் காந்தா பாண்டே, யு.கே.வில் எம்.பி.ஏ. முடித்தார். அதன்பிறகு ஒடிசாவில் இருந்து 1987ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவர், ஒடிசா மற்றும் மத்திய அரசு பணிகளில் பல்வேறு விவகாரங்களில் பணியாற்றியுள்ளார். ஆரம்பத்தில், ஒடிசா மாநில நிதிக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும், ஒடிசா சிறு தொழில் கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் அவர் முக்கிய பதவிகளை வகித்து, நிதி மற்றும் தொழில்துறையில் தனது நிபுணத்துவத்தை வெளிப்படுத்தினார்.
சம்பல்பூர் மாவட்டத்தின் ஆட்சியர் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட், வணிகத் துறையில் துணைச் செயலர் மற்றும் திட்டக் குழுவில் இணைச் செயலர், தொழில்துறை வளர்ச்சி, நிதி மேலாண்மை மற்றும் பொது நிதி உட்பட பல துறைகளில் இவர் சிறப்பாகப் பணியாற்றியுள்ளார்.
தற்போது செபியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்தப் பதவியில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
February 28, 2025 7:11 PM IST


