புரையோடிப்போன புண்ணுக்கு புனுகு பூசும் செயல்
தன்னுடைய நிர்வாகத் திறனற்ற ஆட்சியில் மக்கள் படும் அவலங்களை திசை திருப்பவும், மக்கள் படும் துயரங்களை வெளி உலகிற்கு தெரியாமல் தடுக்கவும், புரையோடிப்போன புண்ணுக்கு புனுகு பூசும் செயலில் இந்த பொம்மை முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது, அவருடைய நேற்றைய பேச்சில் இருந்து தெளிவாகத் தெரிகிறது. கடந்த 45 மாதகால விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியால், தமிழக மருத்துவத் துறை குறிப்பாக, அரசு மருத்துவமனைகள் சீரழிந்து கிடக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. நேற்றைய நிகழ்ச்சியில், MRB மூலமாக சுமார் 2500 மருத்துவர்களை நியமனம் செய்கிறேன் என்று அறிவித்து, மதிப்பெண் மற்றும் ரேங்க் பட்டியலை வெளியிட்டு, “கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல்’ சுமார் 500 இளம் மருத்துவர்களை வீதியில் நிறுத்தி போராட வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு பணி ஆணை வழங்கியதுதான் இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் சாதனை. இதேபோன்ற ஒரு நிலைமை அம்மாவின் அரசில் ஏற்பட்டபோது, அண்ணன் எடப்பாடியார் அவர்கள் இளம் மருத்துவர்கள் அனைவருக்கும் போதிய கால அவகாசம் தந்து, தேர்ச்சி பெற்ற அனைத்து மருத்துவர்களுக்கும் பணி ஆணை வழங்கினார்கள்.

