Last Updated:
நீண்ட முயற்சிக்கு பின்னர் 11 புலிகள் மற்றும் 3 சிங்கங்கள் 2023 ஆகஸ்ட் 27ஆம் தேதி ஸ்லோவாக்கியாவிலிருந்து குஜராத்தின் ஜாம்நகரில் செயல்பட்டு வரும் வந்தாராவிற்கு கொண்டுவரப்பட்டது.
ஐரோப்பாவில் கருணை கொலை செய்யப்படவிருந்த 11 புலிகள் மற்றும் 3 சிங்கங்களை ஆனந்த் அம்பானியின் வந்தாரா வன உயிரினங்கள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் மீட்டெடுத்து பராமரித்து வருகிறது.
ஐரோப்பிய நாடான ஸ்லோவாக்கியாவில் கடந்த 2023 மே 16 அன்று சோகமான சம்பவம் நடந்தது. அங்கு ஜோசப் என்பவர் சிறிய அளவிலான மிருகக்காட்சி சாலையை நடத்தி வந்தார். அவரை அங்கு வளர்ந்த 11 புலிகள் மற்றும் 3 சிங்கங்கள் அடித்துக் கொன்றன.
இதையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்ற அதிகாரிகள் நிலைமையை சரி செய்ய முயன்றனர். அப்போது விலங்குகள் தாக்கியதால் துப்பாக்கியால் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதில் 2 சிங்கங்கள் உயிரிழந்தன. இந்த மோசமான சம்பவத்திற்கு பிறகு 11 புலிகள் மற்றும் 3 சிங்கங்கள் உயிருடன் காணப்பட்டன.
அவற்றை கருணை கொலை செய்து விட வேண்டும் என்று ஏராளமானோர் வலியுறுத்தினர். இது குறித்து வந்தாராவின் துணை அமைப்பான இந்திய பசுமை விலங்கியல் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் எனப்படும் GZRRC அமைப்பு இந்த விலங்குகளை மீட்டெடுக்க முன் வந்தது. இது தொடர்பாக ஸ்லோவாக்கியா மற்றும் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த விலங்குகளை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
நீண்ட முயற்சிக்கு பின்னர் 11 புலிகள் மற்றும் 3 சிங்கங்கள் 2023 ஆகஸ்ட் 27ஆம் தேதி ஸ்லோவாக்கியாவிலிருந்து குஜராத்தின் ஜாம்நகரில் செயல்பட்டு வரும் வந்தாராவிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு தற்போது மீட்கப்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஐரோப்பாவை சேர்ந்த சிங்கம், புலிகளை இந்திய நிறுவனமான வந்தாரா பாதுகாத்து வருகிறது. இது குறித்த தகவல்கள் இந்தியாவிற்கு, ஐரோப்பாவிலும் புகழை பெற்று தந்துள்ளன. உலகில் மிகவும் சவாலான வனவிலங்குகளால் ஏற்படும் பாதிப்புகளை வந்தாரா சர்வ சாதாரணமாக கையாண்டு வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.
February 27, 2025 10:49 PM IST


