கோவாவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவுக்கு இட்லியே காரணம் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியிருப்பது சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கோவாவில் சமீபகாலமாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, வியாழக்கிழமை செய்தியாளர்களுடனான சந்திப்பில் பாஜக எம்.எல்.ஏ. மைக்கேல் லோபோ கூறியதாவது “கோவாவுக்கு வருகை தரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், மாநிலத்தின் நிதி நிலைமையும் பாதிப்படைகிறது. சில வெளிநாட்டினர் ஒவ்வோர் ஆண்டும் கோவாவுக்கு சுற்றுலா வருவர். ஆனால், தற்போது அவர்களின் வருகையும் அரிதாகி விட்டது.
போர் காரணமாகவும், ரஷிய மற்றும் உக்ரைனைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கோவாவுக்கு சுற்றுலா மேற்கொள்வதை நிறுத்திவிட்டனர்.

