• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

Champions Trophy : கடைசி ஓவர் வரை நீடித்த மேட்ச்.. இங்கிலாந்தை தொடரிலிருந்து வெளியேற்றியது ஆப்கானிஸ்தான்

GenevaTimes by GenevaTimes
February 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
Champions Trophy : கடைசி ஓவர் வரை நீடித்த மேட்ச்.. இங்கிலாந்தை தொடரிலிருந்து வெளியேற்றியது ஆப்கானிஸ்தான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 26, 2025 11:18 PM IST

விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அணிக்கு தொடர்ந்து நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தார்

News18News18
News18

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணியை தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர் இப்ராஹிம் ஜத்ரான் கடைசி ஓவர் வரை விளையாடி 177 ரன்கள் குவித்து ஆப்கானிஸ்தான் அணி சவாலான ஸ்கோரை எடுப்பதற்கு உதவியாக இருந்தார். 146 பந்துகளை எதிர்கொண்ட அவர் 6 சிக்சர் 12 பவுண்டரியுடன் 177 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

கேப்டன் ஷாகிதி 40 ரன்களும் அஸ்மதுல்லா உமர் சாய் 41 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் ஒரளவு ரன்கள் சேர்க்க 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 325 ரன்கள் குவித்தது. இதையடுத்து 326 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.

தொடக்க வீரர் பிலிப் சால்ட் 12 ரன்னிலும் பென் டக்கட் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜெமி ஸ்மித் 9 ரன்கள் எடுத்தார். ஹேரி ப்ரூக் 25 ரன்களும், கேப்டன் ஜாஸ் பட்லர் 38 ரன்களும் எடுத்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அணிக்கு தொடர்ந்து நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தார்.

இதையும் படிங்க – Rohit Sharma | ஹாட்ரிக் விக்கெட் மிஸ்.. பரிகாரமாக அக்சர் படேலுக்கு ரோஹித் ஷர்மா கொடுத்த வாக்கு.. என்ன தெரியுமா?

அவருக்கு பக்க பலமாக ஜெமி ஓவர்டன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் 8-ஆவது விக்கெட்டுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஜோ ரூட் 112 ரன்கள் எடுத்து வெளியேற, அவரைத் தொடர்ந்து ஓவர்டன் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். 49.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 317 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த தோல்வியால் இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

First Published :

February 26, 2025 11:18 PM IST

Read More

Previous Post

குற்றம் இழைக்கும் அரசியல் தலைவா்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

Next Post

நீலாய் அருகே நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் 23 வயது பெண் உயிரிழந்தார் | Makkal Osai

Next Post
நீலாய் அருகே நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் 23 வயது பெண் உயிரிழந்தார் | Makkal Osai

நீலாய் அருகே நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் 23 வயது பெண் உயிரிழந்தார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin