Last Updated:
கோயிலுக்கு வருகை புரிந்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோயிலில் மீனாட்சி அம்மன் சன்னதி மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார்.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு 26-வது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்வதற்கு வருகை புரிந்துள்ளார்.
கோயிலுக்கு வருகை புரிந்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு கோயில் நிர்வாகம் சார்பாக மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோயிலில் மீனாட்சி அம்மன் சன்னதி மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். மேலும் பொற்றாமரை குளத்தில் நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இதையும் படிக்க: அனைவருக்கும் பொதுவான ஓய்வூதிய திட்டம்.. பரிசீலனையில் மத்திய அரசு
பின்னர் கோயிலில் இருந்து வெளியே வந்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசும் போது, “உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்துள்ளோம். சிறப்பான தரிசனம் கிடைத்தது. மீனாட்சி அம்மன் கோயில் மதுரையின் பெருமை” என்று கூறினார். மேலும் EVM இயந்திரம், தொகுதி மறுவரையறை குறித்த கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் சென்றார்.
February 26, 2025 5:46 PM IST


