Last Updated:
2025-26 கல்வி ஆண்டில் தெலுங்கானாவில் CBSE, ICSE, IB பாடத்திட்டங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயம். காங்கிரஸ் ஆட்சி இதை அமல்படுத்துகிறது.
தெலுங்கானாவில் வரும் 2025-26 கல்வி ஆண்டு முதல் CBSE, ICSE, IB என எந்த பாடத்திட்டங்களை பின்பற்றினாலும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயம் என்று அம்மாநில அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்தி திணிப்பு சர்ச்சைகளுக்கு நடுவே காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா மாநில பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட உத்தரவில், “வரும் 2025-26 கல்வி ஆண்டு முதல் தெலுங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழி பாடம் கட்டாயம். CBSE, ICSE, IB என எந்த விதமான பாடத்திட்டங்களை பின்பற்றினாலும் இந்த விதி பொருந்தும்” எனவும் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் தெலுங்கை ஒரு பாடமாக கற்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
வெளிமாநில மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் எளிமையான முறையில் தெலுங்கு கற்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டே தெலுங்கு மொழி கட்டாயம் ஆக்கி தெலுங்கானாவில் சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், இதை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டவில்லை. முந்தைய அரசு, தெலுங்கு மொழி பாடத்தை கட்டாயம் ஆக்குவதில் அக்கறை காட்டவில்லை என்று மாநில அரசு தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
February 26, 2025 11:58 AM IST


