• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

PM Kisan திட்டத்தின் 19வது தவணையை வெளியிட்ட பிரதமர் மோடி… ஆன்லைனில் பயனாளிகளின் நிலையை சரிபார்ப்பது எப்படி?

GenevaTimes by GenevaTimes
February 26, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
PM Kisan திட்டத்தின் 19வது தவணையை வெளியிட்ட பிரதமர் மோடி… ஆன்லைனில் பயனாளிகளின் நிலையை சரிபார்ப்பது எப்படி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 26, 2025 1:14 PM IST

PM Kisan | நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு PM-Kisan திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6,000 வரை நிதியுதவி வழங்குகிறது.

News18News18
News18

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் பீகாரில் இருந்து பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் (PM Kisan) 19ஆம் தவணை நிதியை வெளியிட்டார். நேரடி பயனாளி பரிமாற்றத் திட்டம் (DBT – Direct Beneficiary Transfer) மூலம் 19ஆம் தவணையான ரூ.22,000 கோடி மதிப்புள்ள தொகை விவசாயிகளின் பேங்க் அக்கவுண்ட்களில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும், குறைந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசு PM-Kisan திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.6,000 வரை நிதியுதவி வழங்குகிறது.

இந்த திட்டம் மூலம் தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மூன்று சம தவணைகளில் ரூ.2,000 வீதம் மொத்தமாக 6,000 ரூபாய் வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கான இந்த நிதி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் காலக்கட்டங்களில் மூன்று சம தவணைகளில் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் அப்போதைய நிதியமைச்சர் பியூஷ் கோயலால் அறிவிக்கப்பட்டு, பின் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்தத் திட்டம் உலகின் மிகப்பெரிய நேரடி பலன் பரிமாற்றத் திட்டமாக மாறியுள்ளது.

சமீபத்தில் பிரதமர் மோடியால் விடுவிக்கப்பட்டிருக்கும் 19-ஆம் தவணை நிதியைப் பெற, விவசாயிகள் தங்களுக்கான e-KYC நடைமுறையை பூர்த்தி செய்ய வேண்டும். பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கும் தகவல்களின்படி, PM KISAN திட்டத்தில் தங்களைப் பதிவு செய்துள்ள விவசாயிகள் eKYC ப்ராசஸை முடிப்பது கட்டாயமாகும். OTP அடிப்படையிலான eKYC PM KISAN இணையதளத்தில் கிடைக்கிறது அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC-க்கு அருகிலுள்ள CSC மையங்களுக்கு விவசாயிகள் செல்லலாம்.

Beneficiary Status-ஐ எவ்வாறு சரிபார்க்கலாம்?

  • திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in-க்கு செல்லவும்.
  • இந்த இணையதளத்திற்குச் சென்ற பின், பக்கத்தின் வலது பக்கத்தில் உள்ள ‘Know Your Status’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • உங்கள் பதிவு எண்ணை (Registration Number) உள்ளிட்டு கேப்ட்சா கோட்-ஐ நிரப்பி, ‘Get Data’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர் பயனாளியின் நிலை (Status) திரையில் தோன்றும்.

இதையும் படிக்க: Fixed deposit | PNB vs BoB-ன் 400 நாட்கள் ஃபிக்ஸட் டெபாசிட்…! முதலீடுகளில் எவ்வளவு வருமானம் கிடைக்கும்?

பயனாளிகள் பட்டியலில் பெயரைச் சரிபார்ப்பது எப்படி?

  • PM Kisan திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.pmkisan.gov.in-க்கு செல்லவும்.
  • Beneficiary list ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் போன்ற விவரங்களை ட்ராப்-டவுன் மெனு மூலம் தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு Get report-ஐ கிளிக் செய்யவும். இதன் பிறகு திரையில் பயனாளிகளின் (beneficiary) பட்டியல் காட்டப்படும்.
  • உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் 155261 மற்றும் 011-24300606 ஆகிய உதவி எண்களில் அழைத்துப் பேசலாம்.

PM Kisan திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான படிகள்:

  • pmkisan.gov.in இணையதளத்திற்குச் செல்லவும்.
  • ‘New Farmer Registration’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின் ஆதார் எண்ணை உள்ளிட்டு கேப்ட்சாவை நிரப்பவும்.
  • தேவையான விவரங்களை உள்ளிட்டு ‘Yes’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இறுதியாக PM-Kisan விண்ணப்பப் படிவம் 2024-ல் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். எதிர்காலத் தேவைக்காக ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்க: Amazon Shopping Account | அமேசான் ஷாப்பிங் அக்கவுன்ட்டில் உங்களது கிரெடிட் கார்டை சேர்ப்பது எப்படி? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

PM Kisan திட்டத்தில் சேருவதற்கான தகுதி

PM-KISAN 19-வது தவணைக்கு தகுதி பெற, ஒருவர் கீழே குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்:

  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
  • சாகுபடி செய்யக்கூடிய நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்க வேண்டும்.
  • சிறு அல்லது குறு விவசாயியாக இருக்க வேண்டும்.
  • மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.10,000 ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்றவராக இருக்கக் கூடாது.
First Published :

February 26, 2025 1:14 PM IST

தமிழ் செய்திகள்/வணிகம்/

PM Kisan திட்டத்தின் 19வது தவணையை வெளியிட்ட பிரதமர் மோடி… ஆன்லைனில் பயனாளிகளின் நிலையை சரிபார்ப்பது எப்படி?

Read More

Previous Post

ரயில்வே வேலைக்கு நிலம் லஞ்சம்: லாலு குடும்பத்தினர் ஆஜராக டெல்லி நீதிமன்றம் உத்தரவு | Land bribe for railway job Delhi court orders Lalu s family to appear

Next Post

பெரிக்காத்தான் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தயாரா? பிகேஆர் சாவல்! – Malaysiakini

Next Post
பெரிக்காத்தான் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தயாரா? பிகேஆர் சாவல்! – Malaysiakini

பெரிக்காத்தான் பிரதமர் வேட்பாளரை அறிவிக்க தயாரா? பிகேஆர் சாவல்! – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin