Last Updated:
Summer Special Garland: சம்மர் சீசனுக்கு தர்பூசணி கொண்டு தயார் செய்யப்பட்ட 20 கிலோ தர்பூசணி மாலை கவனம் ஈர்த்து வருகிறது.
இந்த ஆண்டு கோடை காலம் வழக்கத்தை விட சற்று முன்பே தொடங்கிவிட்ட நிலையில், அதன் விளைவாக தர்பூசணி விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மக்களின் கவனம் இந்த சம்மர் சீசனில் தர்பூசணி மீதுள்ள நிலையில், இதைப் பயன்படுத்தி விருதுநகரைச் சேர்ந்த பூக்கடைகாரர் லெனின் தர்பூசணி பழங்களைக் கொண்டு 20 கிலோவில் தர்பூசணி மாலை தயார் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
விருதுநகர் பாண்டியன் நகர் பகுதியில் பூக்கடை நடத்தி வரும் லெனின் இது பற்றிக் கூறுகையில், “பூமாலை தவிர்த்து ஒவ்வொரு சீசனுக்கும் கரும்பு, மக்கா சோளம், திராட்சை என விதவிதமான பொருட்கள் கொண்டு வித்தியாசமான மாலைகள் தயார் செய்வது வழக்கம். அது போல இந்த கோடை காலத்தில் உடலுக்கு நன்மை தரும் தர்பூசணியைக் கொண்டு தர்பூசணி மாலை செய்துள்ளேன்.
இதில் மொத்தம் 5 முழு தர்பூசணி பழங்கள் உள்ளது. எடை 20 கிலோ இருக்கும். பெரும்பாலும் இந்த மாதிரி மாலைகளை கோயில்களுக்குத் தான் வாங்கிச் செல்வார்கள். இந்த மாலை கருப்பசாமிக்காகக் கட்டப்பட்டுள்ளது. இதைக் கட்டி முடிக்க 2 மணி நேரம் வரை செலவானது” என்றார்.
இதையும் படிங்க: Eid 2025: பிறை பார்த்துத் துவங்கும் ரம்ஜான் நோன்பு… புனித ரமலான் மாதம் கணக்கிடும் முறை…
மேலும், “ஒவ்வொரு முறையும் இது போன்ற வித்தியாசமான மாலைகளைத் தயார் செய்யும் போது அதில் ஈர்க்கப்பட்ட சிலர் அடுத்த முறை அதே போன்று மாலை செய்ய ஆர்டர் தருவார்கள். அதனாலேயே இது போன்ற மாலைகளை அதிக கவனம் செலுத்தித் தயார் செய்வேன். இந்த மாலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Virudhunagar,Tamil Nadu
February 25, 2025 5:59 PM IST

