Last Updated:
andhra elephant attack | ஆந்திராவில் யானை தாக்கியதில் 3 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வனப்பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு நடந்து சென்றபோது யானைகள் தாக்கியதில் மூன்று பக்தர்கள் உயிரிழந்தனர்.
சிவராத்திரியை ஒட்டி குண்டலகோனாவில் உள்ள சிவன் கோயிலுக்கு வனப்பகுதி வழியாக பக்தர்கள் திங்கட்கிழமை இரவு நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் திடீரென குறுக்கிட்ட யானைக்கூட்டம், பக்தர்களை தாக்கியது. இதில் தினேஷ், மன்னம்மா, திருப்பதி செங்கல்ராயுடு ஆகிய மூன்று பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரை அந்த வழியாக சென்றபக்தர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
February 25, 2025 4:00 PM IST
யானைகள் தாக்கி மூவர் பலி… கோயிலுக்கு சென்றபோது பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்… ஆந்திராவில் அதிர்ச்சி!


