காலி கராப்பிட்டியவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகளிர் வைத்தியசாலை நாளை (27) புதன்கிழமை திறக்கப்படவுள்ளது.
ஜேர்மன் – இலங்கை நட்புறவின் அடையாளமாக நிர்மாணிக்கப்பட்ட இந்த வைத்தியசாலையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திறந்து வைக்கவுள்ளார். தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேற்று வைத்தியசாலையாக அமைக்கப்பட்டுள்ள இவ்வைத்தியசாலை, ஆறு மாடிகளைக் கொண்டுள்ளது.அறுநூறு படுக்கைகள், ஆறு அறுவை சிகிச்சை பிரிவுகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று அவசர சிகிச்சைப் பிரிவுகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், ஆய்வகங்கள், சிசு தீவிர சிகிச்சைப் பிரிவுகள், சிறப்பு குழந்தைகள் பிரிவுகள் உள்ளிட்ட சகல நவீன மருத்துவ வசதிளும் இந்த வைத்தியசாலையில் உள்ளன.

