February 25, 20258:44 AM IST
Tamil Live Breaking News : கோவை: அதிமுக எம்.எல்.ஏ. வீட்டில் சோதனை
கோவை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ஜுனன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.2.75 கோடி சொத்து சேர்த்ததாக, அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகிறார்கள்.
ஏற்கெனவே அம்மன் அர்ஜுனன் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2016 முதல் 2022 வரை எம்.எல்.ஏவாக இருந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 71.19% சொத்து சேர்த்துள்ளாதாக காவல்துறை தகவல்.

