
பட மூலாதாரம், Reuters
அஞ்சலீனா ஜூலி மற்றும் பிராட் பிட்
ஹாலிவுட்டின் பிரபல ஜோடியான அஞ்சலீனா ஜோலி சக நடிகர் பிராட் பிட்டை பிரான்சில் மத சடங்குகள் ஏதும் இல்லாத சிவில் முறையில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடந்த 2005 ஆம் ஆண்டு மிஸ்டர் அண்ட் மிசஸ் ஸ்மித் என்ற திரைப்படத்தில் நடித்ததில் இருந்து இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இருந்தும் இவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்ளவில்லை. இவர்கள் சட்டப்படி திருமணம் செய்துகொள்வார்களா மாட்டார்களா என்பது குறித்து பலவித யூகங்கள் நிலவி வந்தன.
இந்நிலையில் ஞாயிற்றிக்கிழமையன்று 50 வயதாகும் பிராட் பிட், 39 வயதாகும் அஞ்சலீனா ஜோலியை திருமணம் செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டது. நெருங்கிய உறவினர்களும், நண்பர்களுமே இந்த திருமணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள்
இவர்களுக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் உள்ளனர். இதில் மூவர் கம்போடியா, வியட்நாம் மற்றும் எத்யோப்பியாவில் இருந்து தத்தெடுக்கப்பட்டவர்கள்.
ஹாலிவுட்டின் முன்னணி நடிகையான ஜோலி, அகதிகள் நிலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற விடயங்களையும் முன்னெடுத்து வருகிறார்.

