• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Maha kumbh mela | மஹா கும்பமேளாவில் விமானக் கட்டணம், தங்குமிடம், போக்குவரத்துக்கு கூடுதல் கட்டணம்…? கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்…!

GenevaTimes by GenevaTimes
February 25, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Maha kumbh mela | மஹா கும்பமேளாவில் விமானக் கட்டணம், தங்குமிடம், போக்குவரத்துக்கு கூடுதல் கட்டணம்…? கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்…!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் 303 மாவட்டங்களில் இருந்து மஹாகும்பமேளாவிற்கு வருகை தந்த 49,000க்கும் மேற்பட்ட பயணிகளிடமிருந்து இந்த கணக்கெடுப்பு பதில்களைப் பெற்றது. பதிலளித்தவர்களில் 62% ஆண்கள், 38% பெண்கள் ஆவர். இதில் 44 சதவிகிதத்தினர் பெரும் நகரங்களைச் சேர்ந்தவர்களும், 25 சதவிகிதத்தினர் இரண்டாம் நிலை நகரத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 31 சதவிகிதத்தினர் 3, 4, 5-ம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

வழக்கமான கட்டணத்தைவிட 300% அதிகமாக 25% செலுத்தினோம்:

பிரயாக்ராஜுக்கு விமானத்தில் பயணித்தவர்களிடம், “நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ மஹா கும்பமேளாவிற்குச் சென்றபோது, ​​வழக்கமான விமான டிக்கெட்டுகளின் விலையைவிட எவ்வளவு அதிகமாக செலுத்தினீர்கள்?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த 16,215 பேரில், 13% பேர் மட்டுமே கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை. வழக்கமான விமான கட்டணத்தை மட்டுமே செலுத்தினோம் என்று கூறியுள்ளனர்; இருப்பினும், பதிலளித்தவர்களில் 38% பேர் வழக்கமான கட்டணத்தை விட 50-100% அதிகமாக செலுத்தியதாக தெரிவித்தனர்.

மேலும் பதிலளித்தவர்களில் 12% பேர் வழக்கமான கட்டணத்தை விட 100-200% அதிகமாக செலுத்தியதாக கூறினர்; 12% பேர் வழக்கமான கட்டணத்தை விட 200-300% அதிகமாக செலுத்தியதாக கூறினர். மேலும், பதிலளித்தவர்களில் 25% பேர் வழக்கமான கட்டணத்தை விட 300% அதிகமாக செலுத்தியதாக கூறினர். சுருக்கமாக, கணக்கெடுப்பில் பங்கேற்ற விமானப் பயணிகளில் 87% பேர் வழக்கமான விமானக் கட்டணத்தைவிட 50 முதல் 300% அதிகமான கட்டணம் செலுத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

“நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ மகா கும்பமேளாவிற்குச் சென்றபோது, ​​கூடாரங்கள், ஹோட்டல் அறைகள், லாட்ஜ் போன்ற தங்குமிடங்களுக்கு வழக்கமான விலையை விட எவ்வளவு அதிகமாகச் செலுத்தினீர்கள்?” என்று சமீபத்தில் மஹாகும்பமேளாவிற்கு சென்றவர்களிடம் கேட்கப்பட்டது. இந்தக் கேள்விக்கு பதிலளித்த 16,549 பேரில் 26% பேர் “கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை; வழக்கமான கட்டணத்தை மட்டுமே செலுத்தினோம்” என்று கூறியுள்ளனர்.

இருப்பினும், பதிலளித்தவர்களில் 14% பேர் வழக்கமான விகிதத்தை விட 50% வரை அதிகமாக பணம் செலுத்தியதாக கூறியுள்ளனர்; மேலும், 14% பேர் வழக்கமான விகிதத்தை விட 50-100% அதிகமாக பணம் செலுத்தியதாக கூறியுள்ளனர்; 7% பேர் வழக்கமான விகிதத்தை விட 100-200% அதிகமாக பணம் செலுத்தியதாக கூறியுள்ளனர்; 14% பேர் வழக்கமான விகிதத்தை விட 200-300% அதிகமாக பணம் செலுத்தியதாக கூறியுள்ளனர்; 18% பேர் வழக்கமான விகிதத்தை விட 300% அதிகமாக பணம் செலுத்தியதாக கூறியுள்ளனர். மேலும் பதிலளித்தவர்களில் 7% பேர் தெளிவான பதிலைக் கொடுக்கவில்லை.

இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் மனைவியை கொன்ற கணவர்.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பிரயாக்ராஜுக்கு வருகை தந்தவர்களிடம், “நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ மகா கும்பமேளாவுக்குச் சென்றபோது, ​​உள்ளூர் போக்குவரத்து மற்றும் படகு சவாரி போன்றவற்றுக்கான வழக்கமான விலையை விட எவ்வளவு அதிகமாகச் செலுத்தினீர்கள்?” என்று போக்குவரத்துச் செலவுகள் குறித்து கணக்கெடுப்பில் கேட்கப்பட்டது.

கேள்விக்கு பதிலளித்த 16,512 பேரில் 22% பேர் “கூடுதல் கட்டணம் செலுத்தவில்லை; வழக்கமான கட்டணம் மட்டுமே செலுத்தினோம்” என்று கூறினர். இருப்பினும், பதிலளித்தவர்களில் 6% பேர் வழக்கமான கட்டணத்தை விட 50% வரை அதிகமாக செலுத்தியதாக கூறினர்; பதிலளித்தவர்களில் 6% பேர் வழக்கமான கட்டணத்தை விட 50-100% அதிகமாக செலுத்தியதாக கூறினர்; 16% பேர் வழக்கமான கட்டணத்தை விட 100-200% அதிகமாக செலுத்தியதாக கூறினர்; 22% பேர் வழக்கமான கட்டணத்தைவிட 200-300% அதிகமாக செலுத்தியதாக கூறினர்; 12% பேர் வழக்கமான கட்டணத்தை விட 300% அதிகமாக செலுத்தியதாக கூறினர்.

சுருக்கமாக சொன்னால், மஹா கும்பமேளாவிற்கு வருகை தந்து உள்ளூர் போக்குவரத்து சேவைகள், படகு சவாரி போன்றவற்றைப் பயன்படுத்தியவர்களில் 66% பேர் வழக்கமான கட்டணத்தை விட 50-300% அதிகமாக செலுத்தியதாக உறுதிப்படுத்துகின்றனர்.

First Published :

February 24, 2025 2:56 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Maha kumbh mela | மஹா கும்பமேளாவில் விமானக் கட்டணம், தங்குமிடம், போக்குவரத்துக்கு கூடுதல் கட்டணம்…? கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்…!

Read More

Previous Post

Tamilmirror Online || கடந்த 2 மாதங்களாக மாணவி மாயம்

Next Post

பாகிஸ்தான் அணிக்கு மூளை இல்லை; என்ன செய்ய வேண்டுமென யாருக்கும் தெரியவில்லை – ஷோயிப் அக்தர் | Pakistan team has no brains no one knows what to do Shoaib Akhtar

Next Post
பாகிஸ்தான் அணிக்கு மூளை இல்லை; என்ன செய்ய வேண்டுமென யாருக்கும் தெரியவில்லை – ஷோயிப் அக்தர் | Pakistan team has no brains no one knows what to do Shoaib Akhtar

பாகிஸ்தான் அணிக்கு மூளை இல்லை; என்ன செய்ய வேண்டுமென யாருக்கும் தெரியவில்லை - ஷோயிப் அக்தர் | Pakistan team has no brains no one knows what to do Shoaib Akhtar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin