• Login
Wednesday, August 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

“விராட் கோலியை பற்றி முதலில் பேசலாம்…” – ரிஸ்வான் பேச்சால் நெகிழ்ந்த செய்தியாளர்கள்

GenevaTimes by GenevaTimes
February 24, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
“விராட் கோலியை பற்றி முதலில் பேசலாம்…” – ரிஸ்வான் பேச்சால் நெகிழ்ந்த செய்தியாளர்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 24, 2025 11:50 AM IST

இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பு குறைந்துள்ளது.

விராட் கோலி - ரிஸ்வான்விராட் கோலி - ரிஸ்வான்
விராட் கோலி – ரிஸ்வான்

துபாயில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஐந்தாவது போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் விராட் கோலி சதமடித்து, இந்தியாவின் வெற்றிக்கு உதவினார். பாகிஸ்தானின் தோல்விக்குப் பின்னர் அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் பேசியபோது, விராட் கோலியின் உடற்தகுதியை வெகுவாகப் பாராட்டினார்.

போட்டிக்குப் பின்னர் பேசிய ரிஸ்வான், “முதலில் நான் விராட் கோலியைப் பற்றிப் பேசியாக வேண்டும். அவரது உழைப்பைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். அவர் நிச்சயம் கடினமாக உழைத்திருப்பார். அவர் ஃபார்மில் இல்லை என அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் உலகமே எதிர்ப்பார்த்திருக்கும் இதுபோன்ற முக்கியப் போட்டிகளில் அவர் வந்து எளிமையாக ரன் எடுத்து விடுகிறார். நாங்கள் அவரிடம் ரன் கொடுக்க வேண்டாம் என்றுதான் நினைக்கிறோம். ஆனால் அவர் எடுத்துவிடுகிறார்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து தங்கள் அணி வெளியேறும் நிலையில் இருப்பதை ரிஸ்வான் ஒப்புக்கொண்டார். இருப்பினும், பாகிஸ்தான் அணிக்கு இன்னும் அரையிறுதி வாய்ப்பு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வங்கதேசம் நியூசிலாந்தை வீழ்த்தினால், பாகிஸ்தான் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தினால், இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தினால், பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெற வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்க: விராட் கோலி 41 ரன்னிலேயே அவுட்.. எப்படி தெரியுமா?

ஆனால் பிற அணிகளைச் சார்ந்து இருக்கும் சூழலை ரிஸ்வான் விரும்பவில்லை என்றும், வெற்றி பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும், இல்லையேல் அதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது என்பதே தனது அணுகுமுறை என்றும் தெரிவித்தார். தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே தேர்வு செய்தது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ரிஸ்வான், அந்த முடிவைத் தான் ஆதரிப்பதாகவும், இந்திய அணியிலும் குல்தீப் யாதவ் ஒருவர்தான் பிரதான சுழற்பந்து வீச்சாளர் என்றும், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஆல்ரவுண்டர்கள் என்றும் தெரிவித்தார். இருப்பினும் பாகிஸ்தான் அணியில் சல்மான் அலி ஆகா மற்றும் குஷ்தில் ஷா ஆகியோரும் ஆல்ரவுண்டர்களாக விளையாடுகின்றனர் என்பதையும் நினைவு கூர்ந்தார்.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் திட்டமிடல் சரியாக அமையவில்லை என்பதை ரிஸ்வான் தெரிவித்ததோடு, இந்த மைதானத்தில் 270 – 280 ரன்கள் எடுத்திருந்தால் போதுமானது என்று தாங்கள் கருதியதாகவும், ஆனால் அதற்குத் தகுந்தவாறு விளையாட முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்துள்ளது. மற்ற அணிகளின் வெற்றி தோல்வி நிலவரங்கள், பாகிஸ்தான் அணி அரையிறுதியில் தகுதி பெறுவதைப் பாதிக்கும் நிலை உள்ளது.

Also Read: சேஸிங் மாஸ்டர் விராட் கோலி.. கம்பேக் சதம் உட்பட ஒருநாள் போட்டியில் தகர்த்த சாதனைகள்!

First Published :

February 24, 2025 11:50 AM IST

Read More

Previous Post

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளை ஒடுக்கியதால் முதல் முறையாக வாக்களித்த கிராம மக்கள் | Villagers in Chhattisgarh vote for the first time after Maoist crackdown

Next Post

கல்லறைகளில் திடீரென தோன்றிய QR குறியீடுகள்.. பீதியில் உறைந்த ஜெர்மானியர்கள்- மர்மப் பின்னணி! | Makkal Osai

Next Post
கல்லறைகளில் திடீரென தோன்றிய QR குறியீடுகள்.. பீதியில் உறைந்த ஜெர்மானியர்கள்- மர்மப் பின்னணி! | Makkal Osai

கல்லறைகளில் திடீரென தோன்றிய QR குறியீடுகள்.. பீதியில் உறைந்த ஜெர்மானியர்கள்- மர்மப் பின்னணி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin