Last Updated:
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் அடுத்ததாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி இந்த வாரம் ஞாயிறு அன்று நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன. பாகிஸ்தான் அணி இந்த தொடரில் இருந்து வெளியேறி உள்ளது.
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் உள்ளன. குரூப் ஏ பிரிவில் ஒவ்வொரு அணிகளும் தலா 2 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இதில் நியூசிலாந்து மற்றும் இந்திய அணி ஆகியவை 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்த பிரிவில் இன்று நடைபெற்ற வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த அணி அரை இறுதி சுற்றினை உறுதி செய்துள்ளது.
ஒருவேளை இந்த போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றிருந்தால் அரை இறுதி சுற்றுக்கு நியூசிலாந்து, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டிருக்கும். குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள 4 அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் உள்ளன.
இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் உள்ளது. நாளை குரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. புதன் அன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இவ்விரு போட்டிகளின் முடிவில் குரூப் பி பிரிவிலிருந்து அரையிறுதி சுற்றுக்கு செல்லும் அணிகள் ஏறக்குறைய உறுதி செய்யப்படும்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இறுதிப்போட்டி அடுத்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் அடுத்ததாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டி இந்த வாரம் ஞாயிறு அன்று நடைபெறுகிறது.
February 24, 2025 10:38 PM IST


