Last Updated:
தங்கத்தை பல நாடுகள் வாங்கி சேமித்து வைப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றன. குறிப்பாக அமெரிக்க அரசு நிர்வாகம் தங்கத்தை சேமிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
பணம் வைத்திருப்பவர்கள் அதனை முதலீடு செய்து பல மடங்காக பெருக்குவதற்கு விரும்புகிறார்கள். அத்தகைய அவர்கள் தங்களது பணத்தை வங்கியில் செலுத்துவதன் மூலமும், நிலம் மற்றும் தங்கம் வாங்குவதன் மூலமும் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
இவற்றில் தங்கத்தில் முதலீடு செய்வது என்பது பலரது விருப்பமாக உள்ளது. ஆனால் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தங்கத்தின் விலை ஒவ்வொரு வாரமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதற்கு சர்வதேச அரசியல் முக்கிய காரணம் என்று வர்த்தக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்வதேச சந்தைகளில் அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கும், லண்டன் சந்தையிலும் தங்கத்திற்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. உருவாக்கப்படும் தங்கத்தின் அளவு குறைவாக இருப்பதும், அதற்கான தேவை அதிகரித்துள்ளது தான் விலை அதிகரிப்புக்கான முக்கிய காரணம். மேலும் தங்கத்தை பல நாடுகள் வாங்கி சேமித்து வைப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றன.
குறிப்பாக அமெரிக்க அரசு நிர்வாகம் தங்கத்தை சேமிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது. இதனால் ஏற்படும் விளைவுகள் இந்திய சந்தையிலும் எதிரொலிப்பதால் இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்கிறது. தற்போது இந்த விலை உயர்வு எப்போது குறையும் என்ற கேள்வி சாமானிய மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. இதேபோன்று தங்கம் மீதான பல்வேறு நாடுகளில் இறக்குமதி வரி, அதன் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் இங்கிலாந்து வங்கியும் தற்போது தங்கத்தை வாங்கி குவிப்பதற்கு ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அப்போது ரஷ்யாவின் மத்திய வங்கியில் டாலர் மற்றும் யூரோ பணங்கள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டன. உக்ரைனுக்கு ஆதரவு அளித்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் இந்த நடவடிக்கை மேற்கொண்டது. இந்த நடவடிக்கையும் உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
February 24, 2025 8:29 PM IST


