Last Updated:
பிரேசிலிய தம்பதிகளான மனோயல் ஏஞ்சலிம் டினோ (105 வயது) மற்றும் மரியா டி சௌசா டினோ (101 வயது) ஆகியோர், மிக நீண்ட திருமண வாழ்க்கையை கொண்ட உயிர்வாழும் தம்பதியினர் என்ற புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.
பிரேசிலிய தம்பதிகளான மனோயல் ஏஞ்சலிம் டினோ (105 வயது) மற்றும் மரியா டி சௌசா டினோ (101 வயது) ஆகியோர், மிக நீண்ட திருமண வாழ்க்கையை கொண்ட உயிர்வாழும் தம்பதியினர் என்ற புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளனர்.
1940-ல் நடந்த இவர்களின் திருமணத்தை, கின்னஸ் உலக சாதனைகள் மற்றும் நூற்றாண்டுகளுக்கு மேல் வாழ்பவர்களின் வாழ்க்கையை கண்காணிக்கும் தளமான லாங்கிவிகுவெஸ்ட் ஆகியவற்றால் சரிபார்க்கப்பட்ட பின்னர் இந்த தம்பதியினருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இந்த வருட காதலர் தினத்தோடு, இந்த ஜோடிக்கு திருமணமாகி 84 ஆண்டுகள் மற்றும் 77 நாட்கள் ஆகின்றது.
கின்னஸ் உலக சாதனைகளின்படி, 1919-ம் ஆண்டு பிறந்த மனோயலும் 1923-ம் ஆண்டு பிறந்த மரியாவும் முதன்முதலில் 1936-ம் ஆண்டு தங்கள் குடும்பங்களுக்காக விவசாயத்தில் பணிபுரியும் போது சந்தித்தனர். போவா வியாஜெம் மாவட்டத்தில் உள்ள அல்மெய்டா பகுதிக்கு ரபதுராஸ் பொருளை (ஒரு பாரம்பரிய பிரேசிலிய மிட்டாய்) சேகரிக்கச் சென்றிருந்தார் மனோல். அங்குதான் அவர் மரியாவை சந்தித்தார். ஆனாலும் சில ஆண்டுகளுக்குப் பிறகுதான் அவர்களுக்கு இடையே உறவு துளிர்விட ஆரம்பித்துள்ளது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவர்களின் ஆரம்ப சந்திப்பு பெரிய விஷயங்களுக்கு வழிவகுக்கவில்லை. 1940-ம் ஆண்டு வாக்கில் ஒரு தற்செயலான சந்திப்பிற்குப் பிறகுதான், இனி தனது வாழ்க்கை முழுவதையும் மரியாவோடு தான் செலவிடப் போகிறோம் என்று முடிவு செய்தார் மனோயல். மேலும் இந்த வாய்ப்பை மீண்டும் நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர், மரியா மீதான தனது உணர்வுகளை வெளிப்படுத்தி தன்னோடு வெளியே வருமாறு மரியாவை அழைத்தார். அதற்கு அவரும் ஆம் என்று சொல்லவே, இருவரும் கரம் கோர்த்தனர்.
மரியாவின் தாய் ஆரம்பத்தில் இவர்களின் காதலுக்கு எதிராக இருந்தார். எனவே மனோயல் மரியா குடும்பத்தினரின் நம்பிக்கையைப் பெற வேண்டியிருந்தது. விரைவில் அவர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக ஒரு வீட்டைக் கட்டத் தொடங்கினார். இரு வீட்டாரின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, மனோயலும் மரியாவும் 1940-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். மேலும் அவர்கள் கட்டிய வீட்டில் ஒன்றாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். இவர்களின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருந்தாலும், அவர்களால் 13 குழந்தைகளை வளர்க்க முடிந்தது. இப்போது அவர்களுக்கு 55 பேரக்குழந்தைகள், 54 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.
தற்போது இருவரும் நூறு வயதை கடந்தவர்களாக இருப்பதால், அவர்களின் நாட்கள் நிம்மதியாகக் கழிகின்றன. அவரது வயது காரணமாக, மனோயல் பெரும்பாலும் பகலில் ஓய்வெடுப்பார். அதைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் பார்ப்பார். சரி, இவர்களின் நீண்ட கால திருமண வாழ்க்கையின் ரகசியம் தான் என்ன?. இது ரொம்பவும் எளிதான விஷயம் என மரியா மற்றும் அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். அது அவர்களுக்கு இடையேயான ஆழமான காதல் என்று சொல்லப்படுகிறது.
February 24, 2025 1:54 PM IST
84 வருட திருமண வாழ்க்கை.. 100-க்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள்.. பிரேசிலின் காவிய காதல் கதை!


