இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக அமெரிக்கா அளித்து வந்த நிதி, இந்தியத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தியாகக் கூறப்படும் கருத்துகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பதிலளித்துள்ளார்.
ஜோ பைடனிடமிருந்து அமெரிக்க அரசைக் கைப்பற்றிய டொனால்ட் ட்ரம்ப், பல நாடுகளுக்கு வழங்கி வந்த நிதியுதவிகளை நிறுத்தினார். அந்த வகையில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டு வந்த 21 மில்லியன் டாலர்கள் நிறுத்தப்பட்டது.
Jaishankar பேச்சு
டெல்லி பல்கலைக்கழகத்தின் இலக்கிய விழா ஒன்றில் கலந்துகொண்ட ஜெய்ஷங்கர், “நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமலே, உங்கள் சிந்தனை முறைகளால் உங்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம். ஏனென்றால் உங்கள் மீதான தாக்கங்கள், செல்வாக்குகள், எது சரி, எது தவறு என்ற உணர்வுகள் எல்லாமும் நீங்கள் தினமும் என்ன படிக்கிறீர்கள், என்ன பார்க்கிறீர்கள் என்பதிலிருந்து மொபைலால் கட்டுப்படுத்தப்படுகிறது” எனப் பேசினார்.

