Last Updated:
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸில் விளையாடி 14,000 ரன்களை எடுத்தார். இதேபோன்று குமார் சங்கக்கரா 378 இன்னிங்ஸில் விளையாடி 14,000 ரன்களை கடந்தார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்களை கடந்த விராட் கோலி புதிய உலக சாதனையை ஏற்படுத்தி உள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 241 ரன்கள் எடுத்தது.
இதை அடுத்து 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக சுப்மன் கில் மற்றும் விராட் கோலி, விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இணை சிறந்த பார்ட்னர்ஷிப்பை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தனர்.
இந்த போட்டியில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி 111 பந்துகளில் 7 பவுண்டரியுடன் சதம் அடித்து மீண்டும் பார்முக்கு வந்துள்ளார். இறுதி கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற மிக குறைவான ரன்களை தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி இன்றைய போட்டியில் சதம் அடித்தார்.
இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடந்து உலக சாதனை படைத்துள்ளார் விராட் கோலி. இது ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக எடுக்கப்பட்ட 14,000 ரன்கள் ஆக அமைந்தது.
இதையும் படிங்க – Champions Trophy : 1 பந்து வீசப்படுவதற்கு முன்பே மோசமான சாதனை படைத்த இந்தியா!
முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்ஸில் விளையாடி 14,000 ரன்களை எடுத்தார். இதேபோன்று குமார் சங்கக்கரா 378 இன்னிங்ஸில் விளையாடி 14,000 ரன்களை கடந்தார். இவ்விரு வீரர்களின் சாதனையை விராட் கோலி இன்று முறியடித்துள்ளார்.
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடப்பதற்கு மொத்தமே 287 இன்னிங்ஸ் தேவைப்பட்டது. இதற்கிடையே குரூப் ஏ பிரிவில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று பாயிண்ட்ஸ் டேபிளில் முதல் இடத்தை வகிக்கிறது.
February 23, 2025 11:28 PM IST


