பின்னர், இரண்டாவது இன்னிங்சை விளையாடிய கேரளா 114 ரன்களை 4 விக்கெட் இழப்புக்கு எடுத்திருந்தது. கடைசி நாள் முடிவடைந்த நிலையில், 6 விக்கெட்டுகள் கேரளாவுக்கு மீதமிருந்தது. இதையடுத்து, இந்த மேட்ச் டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது. ஆட்டம் டிரா ஆனாலும், முதல் இன்னிங்ஸில் குஜராத்தை விட கூடுதல் ஸ்கோரை கேரளா பதிவு செய்ததால் அந்த அணிக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு கிடைத்தது.

