பெயர்கள் என்பது ஒரு நபரின் முக்கிய அடையாளமாகிவிட்டது. அந்த வகையில், ஒரு பெயரில் பல பேர் இருப்பார்கள். ஆனால் நாட்டிலேயே அதிகம் பேர் வைத்திருக்கும் பெயராக இருப்பது பற்றிய தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது சில பெயர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் என இரு பாலருக்கும் வைக்கக் கூடிய பெயர்களாக இருக்கும். அதில் ரமணி, பாலா, ஸ்ரீ போன்றவை அடங்கும். ஆனால் இரு பாலருக்கும் வைக்கக் கூடிய பெயர்களில் ஸ்ரீ என்பதை 88 சதவீத ஆண்களும் 12 சதவீத பெண்களும் வைத்திருக்கிறார்களாம்.
கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான தகவலின்படி, இந்தியாவில் அதிகம் பேர் வைத்திருக்கும் பெயர் என்றால் அது ராம். உண்மையில் பலருக்கும் இது ஆச்சரியத்தைத் தரலாம். பிறகு யோசித்துப் பார்த்தால், நமக்கே ஒரு நான்கு ராம்களைத் தெரிந்திருக்கும். அந்த வகையில் பார்த்தால் இந்தியாவில் 56 லட்சம் பேர் ராம் என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்.
ராம் என்பது வெறும் கடவுள் பெயர் மட்டுமல்ல, ஆன்மிகப் பெயர், பலம், பக்தி என பல அடிப்படை விஷயங்களைக் கொண்டிருக்கிறது. எனவேதான் காலங்களைக் கடந்தும் ராம் என்ற பெயரை பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு சூட்டிக்கொண்டே இருக்கிறார்களாம்.

