கோலாலம்பூர்:
இன்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) “அல்லாஹ்” என்ற வார்த்தை கொண்ட காலுறைகளை விற்பனை செய்ததாக KK சூப்பர் மார்ட்டின் இயக்குநர்கள் மற்றும் விநியோகிஸ்தரானசின் ஜியான் சாங் நிறுவனம் ஆகியவற்றுக்கு எதிராக ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298 இன் கீழ் முஸ்லிம்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன் காலுறைகளை விற்றதாக KK சூப்பர் மார்ட்டின் இயக்குநர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது, அதே நேரத்தில் Xin Jian Changநிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் 109வது பிரிவின் கீழ் காலுறைகளை விநியோகம் செய்ததற்காக குற்றம் சாட்டப்பட்டது.
இக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
இக்குற்றச்சாட்டுக்கள் ஷாஆலம் செஷன்ஸ் நீடிமன்ற நீதிபதி முஹமட் அனஸ் மஹாட்ஷிர் முன்னிலையில் வாசிக்கப்பட்டப்போது, அந்நிறுவனத்தின் இயக்குநர்களான டத்தோஶ்ரீ கேகே சாய், அவரது மனைவி லோ சியூ முய் ஆகியோர் தமக்கெதிரான குற்றச்சாட்டை மறுத்து, விசாரணை கோரினர்.
இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு தலா RM10,000 ஜாமீன் நிர்ணயித்த நீதிபதி முஹமட் அனஸ் மஹாட்ஷிர் வழக்கை மீண்டும் செவிமடுக்க ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.




