கேமரா : முன்பக்கத்தில் நாட்ச் வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ள கேமராக்கள் ஃபேஸ் அன்லாக் செய்வதை எளிமையாக்குகின்றன.
வழக்கமாக ஐபோன்களில் இருக்கும் ஹோம் ஸ்விட்ச் பட்டன் இந்த புது மாடலில் இல்லை. இதனால், தொடுதிரை மூலம் ஐபோனை அன்லாக் செய்வது மாற்றப்பட்டு முகத்தைக் காட்டி ஃபேஸ் அன்லாக் முறை மட்டுமே அமையப்பெற்றுள்ளது ஐபோன் 16இ.
பின்பக்கத்தில் ஒரேயொரு கேமரா மட்டும்தான். 48 மெகா பிக்சலுடன் உள்ள இந்த கேமரா, ஆப்பிளுக்கே உரிய பாணியில் போட்டோக்களை உயர் ரக க்ளாரிட்டியில் எடுத்து தருகிறது.
ஐபோன் 16 மாடல்களில் இருந்ததைப் போன்ற கேமரா கண்ட்ரோல் வசதி இந்த புதுவரவில் இல்லை. ஆனால், ஆப்பிளின் ட்ரேட்மார்க்கான ஆக்ஷன் பட்டன் வழக்கம்போல இடம்பெறத் தவறவில்லை.

