• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பது ‘நியாயமற்றது’ – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து

GenevaTimes by GenevaTimes
February 20, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பது ‘நியாயமற்றது’ – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 20, 2025 2:20 PM IST

டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைத்தால் அமெரிக்காவிற்கு நியாயமற்றது என்று கூறினார்.

அதிபர் டிரம்ப் - எலான் மஸ்க்அதிபர் டிரம்ப் - எலான் மஸ்க்
அதிபர் டிரம்ப் – எலான் மஸ்க்

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைத்தால், அது அமெரிக்காவிற்கு நியாயமற்றது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க இறக்குமதிகளுக்கு வரி விதிக்கும் எந்த நாட்டிற்கும் பதிலுக்கு வரி விதிக்கும் திட்டத்தை டிரம்ப் அரசு வகுத்து வருகிறது. சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தபோது, இந்தியாவில் மின்சார வாகனங்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதி வரிகள் அதிகமாக இருப்பது குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குடன், சீனா ஹானிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், “உலகில் உள்ள அனைத்து நாடுகளும், வரி விதிப்பதன் மூலம் நம்மைப் பயன்படுத்திக் கொள்கின்றன. உதாரணமாக, இந்தியாவில் ஒரு காரை விற்பனை செய்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது,” என்று கூறினார்.

மேலும் “நான் பிரதமர் மோடியிடம், ‘நீங்கள் எங்களிடம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் எந்த வரியை விதிக்கிறீர்களோ, அதே வரியை நாங்களும் விதிப்போம்’ என்று கூறினேன்,” என்று டிரம்ப் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், “மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால் அது அமெரிக்காவிற்கு நியாயமற்றது” என்று கூறினார்.

இதுகுறித்து அதே நிகழ்ச்சியில் பேசிய எலான் மஸ்க், “இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு கிட்டத்தட்ட 100% இறக்குமதி வரி விதிக்கப்படுவதாகவும், இது உள்ளூர் உற்பத்தியாளர்களான டாடா மோட்டார்ஸுக்கு நன்மை பயப்பதாகவும், இது நியாயமற்றது” என்றும் கூறினார்.

இதையும் படிக்க: பனாமா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள்..! “உதவி.. உதவி..” என கதறும் காட்சிகள் வெளியீடு

கடந்த மார்ச் மாதம், இந்திய அரசாங்கம் புதிய மின்சார வாகனக் கொள்கையை அறிவித்தது. அதன்படி, கார் உற்பத்தியாளர்கள் 500 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்து இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால், இறக்குமதி வரி 15% ஆக குறைக்கப்படும் என கூறப்பட்டது.

சமீபத்தில், டெஸ்லா நிறுவனம் புது தில்லி மற்றும் மும்பையில் தனது விற்பனை மையங்களைத் திறக்க இடம் தேடி வருவதாகவும், 13 பணியிடங்களுக்கு ஆட்களைத் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியானது. டெஸ்லா நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது வாகனங்களை விற்பனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

First Published :

February 20, 2025 2:20 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை அமைப்பது ‘நியாயமற்றது’ – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து

Read More

Previous Post

NPS Vatsalya Yojana | 60 வயதில் உங்கள் குழந்தைக்கு ரூ.100 கோடி ஓய்வூதியத்தை உருவாக்குவது எப்படி…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

Next Post

கேஎல்ஐஏவிலிருந்து சூட்கேஸ்களில் 4,386 ஆமைகளைக் கடத்த முயன்ற இருவர் கைது – Malaysiakini

Next Post
கேஎல்ஐஏவிலிருந்து சூட்கேஸ்களில் 4,386 ஆமைகளைக் கடத்த முயன்ற இருவர் கைது – Malaysiakini

கேஎல்ஐஏவிலிருந்து சூட்கேஸ்களில் 4,386 ஆமைகளைக் கடத்த முயன்ற இருவர் கைது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin