பூசா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயிரிழந்த சந்தேக நபரான கணேமுல்ல சஞ்சீவ மீது 22 வழக்குகள் நிலுவையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், அவர் ஒரு சிறப்பு வகை சந்தேக நபர் என்பதால், அவர் நேற்று பூசா சிறைச்சாலையிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வழியாக சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில், சிறைச்சாலை அவசர நடவடிக்கை குழு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு அதிகாரிகளின் சிறப்பு பாதுகாப்பின் கீழ் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
காலை சுமார் 9.45 மணியளவில், நீதிமன்றத்திற்குள் வைத்து அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. R

