• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ரூ.45,000க்குள் 10 கிராம் தங்கம் வாங்கலாம்… இப்படி ஒரு வழி இருக்கு?

GenevaTimes by GenevaTimes
March 26, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
ரூ.45,000க்குள் 10 கிராம் தங்கம் வாங்கலாம்… இப்படி ஒரு வழி இருக்கு?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மார்ச் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.62,050க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை இவ்வளவு அதிகமாக இருக்கும் நிலையில், 10 கிராம் தங்கம் ரூ.45 ஆயிரத்திற்கு கிடைக்குமென்றால் நம்புவீர்களா? ஆம், குறைந்த விலைக்கு தங்கம் வாங்கலாம். ஆனால் இதற்கு நீங்கள் பூடான் செல்ல வேண்டும்.

பூடானில் குறைந்த விலையில் தங்கம் வாங்கி அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வரலாம். வரி செலுத்த தேவையில்லை. ஆனால் இதற்கு சில நிபந்தனைகள் பொருந்தும். அந்த நிபந்தனைகளை பின்பற்றுபவர்களுக்கு குறைந்த விலையில் தங்கம் கிடைக்கும்.

விளம்பரம்

பூடானின் ஃபுயென்ஷோலிங் மற்றும் திம்பு பகுதிகளுக்குச் செல்லும் இந்தியர்கள் குறைந்த விலையில் தங்கம் வாங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதாவது இந்தியர்கள் அங்கு வரியில்லா தங்கத்தை வாங்கலாம். எந்த வரியும் செலுத்தாமல் தங்கத்தை வாங்கலாம். கடந்த பிப்ரவரி 21 அன்று, பூடான் அரசாங்கம் இந்தியர்களுக்கு வரியில்லா தங்கத்தை விற்க முடிவு செய்தது. அன்று, மன்னர் லோசரின் பிறந்தநாள், இதையடுத்து இந்த முக்கியமான முடிவை எடுத்தது பூடான் அரசு. இந்த பின்னணியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதே நோக்கமாகும்.

விளம்பரம்

சமீபத்திய விலைகளின்படி, இந்தியாவில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65,150 ஆக உள்ளது. பூட்டானில் இதே தங்கத்தின் விலை BTN 43,741.90 அதாவது 43,741.90 பூட்டான் பணம். இந்திய மதிப்பில் ஒரு BTN தோராயமாக ஒரு ரூபாய்க்கு சமம். அதாவது இந்தியர்கள் ரூ.43,741.90 என்ற அதே விலையில் 10 கிராம் தங்கம் வாங்கலாம். ரூ.16 ஆயிரத்துக்கு மேல் தள்ளுபடியுடன் 10 கிராம் தங்கத்தை சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

ஆனால் இவ்வளவு குறைந்த விலையில் தங்கம் வாங்க சில நிபந்தனைகள் உள்ளன. வரியில்லா தங்கத்தை வாங்க இந்தியர்கள் நிலையான வளர்ச்சிக் கட்டணமாக ரூ.1,200 முதல் ரூ.1,800 வரை செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தையும் சேர்த்தால் 10 கிராம் தங்கம் ரூ.45 ஆயிரத்துக்கு வாங்கலாம். இது தவிர, பூட்டான் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா விடுதியில் குறைந்தது ஒரு இரவு தங்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் தங்கம் வாங்க அமெரிக்க டாலர்களையும் கொண்டு வர வேண்டும்.

விளம்பரம்

Also Read |
95 வருடங்களாக இந்த நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை… காரணம் என்ன தெரியுமா?

ஆடம்பரப் பொருட்களை விற்கும் நிதி அமைச்சகத்திற்குச் சொந்தமான வரியில்லா விற்பனை நிலையங்கள் மூலம் வரியில்லா தங்கத்தை வாங்கலாம். மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரிய விதிகளின்படி, இந்திய ஆண் ஒருவர் ரூ. 50,000 மதிப்புள்ள தங்கம் கொண்டு வரலாம். இந்திய பெண் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வெளிநாடுகளில் இருந்து வரியின்றி இந்தியாவிற்கு கொண்டு வரலாம்.

விளம்பரம்

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே – குஜராத் டைட்டன்ஸ் மோதல் | CSK Gujarat Titans to Clash at Chepakkam Stadium today

Next Post

‘பொய்’ கூறியதால் பட்டத்தைப் பறிகொடுத்த அழகி

Next Post
‘பொய்’ கூறியதால் பட்டத்தைப் பறிகொடுத்த அழகி

'பொய்' கூறியதால் பட்டத்தைப் பறிகொடுத்த அழகி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin