Last Updated:
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கையில், 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உட்பட பலர் பனாமா ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இறங்கியுள்ள சூழலில், இந்தியர்கள் உட்பட 300க்கும் அதிகமானோர் திருப்பி அனுப்புவதற்காக நடவடிக்கையில் பனாமா ஹோட்டலில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு அடைக்கப்பட்டவர்கள் ஹோட்டலின் ஜன்னல் வழியாக ”உதவி.. உதவி…” என கதறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தியா, ஈரான், நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் பிற நாடுகள் உட்பட 10 ஆசிய நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதிகள் குடியேறிகள் இங்கு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்கா, அவர்களில் சிலரை நேரடியாக நாடு கடத்துவதில் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது.
இதனிடையே, பனாமா – அமெரிக்கா இடையிலான இடம்பெயர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, புலம்பெயர்ந்தோருக்கு மருத்துவ உதவி மற்றும் உணவு வழங்கப்படுவதாக பனாமாவின் பாதுகாப்பு அமைச்சர் பிராங்க் அப்ரேகோ தெரிவித்தார்.
“Not safe in our country”: Indians among 300 deportees detained by US seen crying for help from the windows of hotel in Panama where they are currently housed till the time authorities arrange for their return to their home countries#India #USDeportees #Deportation #Trump2025 pic.twitter.com/7UhZy0qAJ7
— News18 (@CNNnews18) February 20, 2025
இவர்களில் 171 பேர் சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு மற்றும் ஐநா அகதிகள் அமைப்பின் உதவியுடன் அவர்களது தாய்நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனக்கூறினார்.
February 20, 2025 12:11 PM IST
பனாமா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ள இந்தியர்கள்..! “உதவி.. உதவி..” என கதறும் காட்சிகள் வெளியீடு


