Annamalai : கரூர் 80 அடி சாலையில் கரூர் மாவட்ட பாஜக சார்பில் நடைபெறும் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக் கூட்டத்தில், மாநிலத் துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “இந்தக் கூட்டத்தில் திராவிட தற்குறிகளான உதயநிதி, அன்பில் மகேஷ் போல அவர்கள் ஸ்டைலில் பேச இருக்கிறேன். தாய்மார்கள் மன்னிக்க வேண்டும்.

