• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

போலியான கடன் தளங்களை கண்டறிவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

GenevaTimes by GenevaTimes
February 19, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
போலியான கடன் தளங்களை கண்டறிவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் டிஜிட்டல் கடன் வழங்கும் வசதி வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. மேலும், வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தனிப்பயனாக்கப்பட்ட பல்வேறு கடன் விருப்பங்களை வழங்கி வருகிறார்கள். ஆன்லைனில், தனிநபர் கடன் கோரப்பட்ட சில நிமிடங்களிலேயே கடன் பெறும் அளவுக்கு நிதித்துறை விரைவாகியுள்ளது. டிஜிட்டல் கடன் தளங்களின் இத்தகைய முன்னேற்றம், இந்தியாவின் நிதிச் சேவையை முற்றிலுமாக மாற்றியுள்ளது என்றுதான் கூற வேண்டும்.

ஒருபக்கம் வளர்ந்து வரும் உடனடி கடன் வசதி மக்களுக்கு நிம்மதியை தந்தாலும், மறுபக்கம் போலி கடன்கள் மக்களை சூழலில் சிக்க வைக்கிறது. அதாவது, பல போலி ஆன்லைன் கடன் மோசடிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க, ஆன்லைன் கடன் பொறியில் சிக்காமல் இருக்க கவனமாக இருக்க வேண்டியது அவசியம். அங்கீகரிக்கப்பட்ட கடன் தளங்களுக்கும், மோசடி தளங்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை கண்டறிவதும் கடினமான விஷயமாக இருந்தாலும், அதனை கண்டறிய சில வழிகளை பின்பற்றலாம்.

பொதுவாக, மோசடி கும்பல், போலி வலைத்தளங்கள், சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைப் பயன்படுத்தி மக்களின் ஆசையை தூண்டி பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். இந்த போலி கடன் சலுகைகள் பெரும்பாலும் கவர்ச்சிகரமானதாகவே இருக்கின்றன. விரைவான ஒப்புதல் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் போன்ற வாக்குறுதிகளுடன், கடன் வாங்குபவர்களை இவர்கள் மோசடியில் சிக்க வைக்கிறார்கள்.

எனவே, இத்தகைய போலி கடன் சேவைகளில் சிக்காமல் இருக்கவும், போலி கடன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குநர்களை வேறுபடுத்த உதவும் சில முக்கிய காரணிகளை இங்கே விரிவாகப் பார்ப்போம்.

போலி கடன்கள் என்றால் என்ன?

போலி கடன்கள் என்பது மக்களின் பணத்தைக் குறிவைத்து மோசடி கும்பல் அரங்கேற்றும் மோசடி ஆகும். இதில், ஒருவர் கடன் வழங்குவது போல் நடித்து, பணம் தேவைப்படும் மக்களை ஈர்க்க எளிதான ஒப்புதல், குறைந்த வட்டி விகிதங்கள் அல்லது விரைவான பணம் செலுத்துதல் போன்ற வாக்குறுதிகளுடன் கடன்களை விளம்பரப்படுத்துகிறார்கள். அவர்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கேட்கலாம் அல்லது கடனை வழங்குவதற்கு முன்கூட்டியே கட்டணம் வசூலிக்கலாம். இத்தகையவர்களிடம் இருந்து கவனமாக இருப்பது நல்லது.

போலி கடனை கண்டறிவது எப்படி?

போலி கடன்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள பின்வரும் சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.

* முன்கூட்டியே கட்டணம் கேட்பது: மோசடி செய்யும் கடன் வழங்குபவர்கள் பெரும்பாலும் கடனை அங்கீகரிப்பதற்கு முன்பே பணம் செலுத்துமாறு கேட்கிறார்கள். ஆனால், உண்மையான கடன் வழங்குநர்கள் கடன் ஒப்புதலுக்குப் பிறகே கட்டணங்களைப் பெறுவார்கள்.

* முகவரி அல்லது தொடர்பு இருக்காது: உண்மையான கடன் வழங்குபவர்கள் ஒரு நேரடி அலுவலகம் மற்றும் தெளிவான தகவல் தொடர்பு விவரங்களை கொண்டிருப்பார்கள். மாறாக, கடன் வழங்குபவரின் வலைத்தளத்தில் இந்த அத்தியாவசியத் தகவல் இல்லை என்றால் எச்சரிக்கையாக இருங்கள்.

* சலுகைகள்: ஒரு கடன் வழங்குநர் வழக்கத்திற்கு மாறாக குறைந்த வட்டி விகிதங்கள் அல்லது உடனடி ஒப்புதலை உறுதி செய்தால், அது ஒரு மோசடியாக இருக்கலாம். அங்கீகரிக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்த, சட்டப்பூர்வ நிதி நிறுவனங்களின் சலுகைகளை எப்போதும் ஒப்பிடுவது நல்லது.

* தெளிவற்ற கடன் விதிமுறைகள்: கடன் விதிமுறைகளை எப்போதும் கவனமாகப் படியுங்கள். அதில் ஏதாவது தெளிவற்றதாக இருந்தால், அது சாத்தியமான மோசடியின் அறிகுறியாக இருக்கலாம். சட்டப்பூர்வ கடன் வழங்குபவர்களின் விதிமுறைகள் வெளிப்படையானவை மற்றும் புரிந்துகொள்ள எளிதானவை என்பதை உறுதிசெய்கிறார்கள்.

* பாதுகாப்பற்ற வலைத்தளங்கள்: எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் உள்ளிடுவதற்கு முன், வலைத்தளம் “https://” உடன் தொடங்குவதை உறுதி செய்வதோடு, அது பாதுகாப்பானது என்பதைக் குறிக்கும் பேட்லாக்கை கொண்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பாதுகாப்பற்ற வலைத்தளங்கள் உங்களது தகவல்களை ஆபத்தில் சிக்கவைக்கலாம்.

* கடன் சரிபார்ப்பு: அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குநர்கள் பொதுவாக உங்கள் கடன் திருப்பிச் செலுத்தும் திறனை மதிப்பிடுவார்கள். கடன் மதிப்பீடு இல்லாமல் ஒரு கடன் வழங்குபவர் கடனை வழங்கினால், எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.

* அழுத்தம் கொடுத்தல்: நீங்கள் அவசரமாக அல்லது விரைவாக கடன் வாங்க அழுத்தம் கொடுத்தால் எச்சரிக்கையாக இருங்கள். நியாயமான கடன் வழங்குநர்கள் கடன் விதிமுறைகளை பரிசீலிக்க உங்களுக்கு நேரம் தருவார்கள். மோசடி செய்பவர்கள் விவரங்களை முறையாக மதிப்பாய்வு செய்யாமல், அவசர முடிவுகளை எடுக்க உங்களைத் தள்ளலாம்.

* வரையறுக்கப்பட்ட ஆன்லைன் தகவல்கள்: ஒரு நம்பகமான கடன் வழங்குநர் ஒரு தொழில்முறை வலைத்தளம் மற்றும் செயலில் உள்ள சமூக ஊடக பக்கத்தைக் கொண்டிருப்பார். அவர்களின் ஆன்லைன் விவரம் குறைவாக இருந்தால் நம்பகத்தன்மை குறைவானதாக இருக்கலாம்.

* போலி ரிவிவ்கள்: மோசடி செய்பவர்கள் பெரும்பாலும், அங்கீகரிக்கப்பட்ட கடன் வழங்குநகராக காட்ட போலி ரிவிவ்களை உருவாக்குகிறார்கள். எனவே, அவற்றை சரிபார்ப்பது மிகவும் முக்கியம்.

* ஆவணங்கள்: கடன் வழங்குபவர் எந்த எழுத்துப்பூர்வ கடன் ஒப்பந்தம் அல்லது விதிமுறைகளையும் வழங்கவில்லை என்றால் எச்சரிக்கையாக இருங்கள். உண்மையான கடன் வழங்குநர்கள் எப்போதும் தெளிவான ஆவணங்களை உங்களுக்கு வழங்குவார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கியால் (RBI) அங்கீகரிக்கப்பட்ட புகழ்பெற்ற டிஜிட்டல் கடன் தளங்கள் அல்லது ஆர்பிஐ-இல் பதிவுசெய்யப்பட்ட கடன் வழங்குநர்கள் மூலம் தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிப்பது எப்போதும் சிறந்தது.

First Published :

February 19, 2025 7:29 AM IST

Read More

Previous Post

Puducherry Weather 19 February 2025: புதுச்சேரி நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 21.9°C, இன்று வானிலை எப்படி இருக்கும் என்பதை அறியவும்

Next Post

சாலைத் தடுப்பில் மோதிய கார்; ஆடவர் காயம் | Makkal Osai

Next Post
சாலைத் தடுப்பில் மோதிய கார்; ஆடவர் காயம் | Makkal Osai

சாலைத் தடுப்பில் மோதிய கார்; ஆடவர் காயம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin