Last Updated:
Chief Election Commissioner Gyanesh Kumar | ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக பிரஷாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வருகிறது.
தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமித்து மத்திய அரசு திங்கட்கிழமை இரவு அறிவிப்பை வெளியிட்டது. இந்நிலையில் ஞானேஷ் குமார் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
தனது முறையீட்டை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவசர கதியில் இரண்டாவது முறையாக தலைமை தேர்தல் ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளதாகவும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் இந்த நியமனம் இருப்பதாகவும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம்!
இந்த வழக்கு புதன்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. நீதிபதி சூர்யகாந்த் அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.
Delhi Cantonment,New Delhi,Delhi
February 18, 2025 1:01 PM IST


