• Login
Tuesday, August 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

‘ஜெலன்ஸ்கி உடன் புதின் பேசத் தயார்’ – அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ரஷ்யா தகவல் | Putin ready to speak to Zelensky if necessary Kremlin says

GenevaTimes by GenevaTimes
February 18, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
‘ஜெலன்ஸ்கி உடன் புதின் பேசத் தயார்’ – அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ரஷ்யா தகவல் | Putin ready to speak to Zelensky if necessary Kremlin says
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மாஸ்கோ: தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சவுதி அரேபியாவில் அமெரிக்க, ரஷ்ய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட நிலையில், ரஷ்யா இவ்வாறு தெரிவித்துள்ளது.

ரஷ்யா அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அதிபர் புதின் கூறியுள்ளார்” என்றார். முன்னதாக, “உக்ரைன் பங்கு பெறாமல் மேற்கொள்ளப்படும் எந்த அமைதி ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம்” என ஜெலன்ஸ்கி கூறியிருந்தது கவனிக்கத்தகக்து. கடந்த வாரம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “ஒரு இறையான்மை கொண்ட நாடாக, நாங்கள் பங்கு பெறாத பேச்சுவார்தையில் எட்டப்படும் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு, அமைதி பேச்சுவார்த்தைக்கான அழுத்தம் அதிகரித்துள்ளது. புதின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனிதனியாக தொலைப்பேசியில் உரையாடல் நடத்தியுள்ளார்.

அமெரிக்கா – ரஷ்யா பேச்சுவார்த்தை: இந்தப் பின்னணியில் சவுதி அரேபியாவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா உயர் அதிகாரிகள் சந்தித்து உக்ரைன் போரினை நிறுத்துவது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், அமெரிக்கா வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபினியோவை சந்தித்தார். உக்ரைன் மற்றும் ஐரோப்பா இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய தரப்பில் கூறும்போது, “உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவது குறித்து சவுதி அரேபியாவில், அமெரிக்காவும், ரஷ்யாவும் நேர்மறையான, ஆக்கபூர்வமான நான்கு மணி நேர சந்திப்பை நடத்தின” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, இபோரை நிறுத்துவதற்கு ரஷ்யா எந்த அளவு உறுதியாக இருக்கிறது என்பதை அறிய இந்த பேச்சுவார்த்தை முதல் படி என்று அமெரிக்காவும், இந்தப் பேச்சுவார்த்தை அமெரிக்காவுடனான உறவினை இயல்பாக்க உதவும் என நம்புவதாக ரஷ்யாவும் தெரிவித்திருந்தன.



Read More

Previous Post

தமிழக வணிகவரித் துறையில் நடப்பு நிதியாண்டில் ஜன.31 வரை ரூ.1,13,235 கோடி வருவாய் ஈர்ப்பு | Revenue attraction of Rs. 1,13,235 crore in the current financial : Minister Moorthy

Next Post

Biawak masuk kelas | Makkal Osai

Next Post
Biawak masuk kelas | Makkal Osai

Biawak masuk kelas | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin