04
மத்திய ஆப்பிரிக்க குடியரசு (CAR): 5,849,358 மக்கள் தொகை கொண்டுள்ள இந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $3.03 பில்லியன் ஆகும். மத்திய ஆப்பிரிக்க குடியரசு, உலகின் மூன்றாவது ஏழ்மையான நாடாகும். இந்த சிறிய நாட்டில் தங்கம், எண்ணெய், யுரேனியம் மற்றும் வைரங்கள் நிறைந்த இருப்பு இருந்தாலும், அரசியல் ஸ்திரமின்மை, ஆயுத மோதல்கள், 80 சதவீத குடிமக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் ஒரு தோல்வியுற்ற நாடாக அதை மாற்றியுள்ளன.


