Last Updated:
நாளை மறுதினம் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நிபந்தனையுடன் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல பிசிசிஐ அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் வீரர்களை நிபந்தனையுடன் மனைவியை அழைத்துச் செல்வதற்கு வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது. முன்னதாக மனைவியை அழைத்துச் செல்லக்கூடாது என கட்டுப்பாடு விதித்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல். ராகுல் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் போட்டி நடந்தால் தனது தங்களது மனைவியையும் அழைத்துக் கொண்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்க உள்ளது.
இதில் இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறுகிறது. மற்ற அணிகருடன் ஒப்பிடும்போது இந்திய அணி வலுவாக இருப்பதால் இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் தெரிவித்துள்ளார்கள். இதற்கிடையே சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தங்களது மனைவிகளை கிரிக்கெட் வீரர்கள் அழைத்துச் செல்லக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முன்பு தெரிவித்திருந்தது.
தற்போது ஒரே ஒரு போட்டிக்கு மட்டும் குடும்பத்தினரை அழைத்துச் செல்ல வீரர்களுக்கு பிசிசிஐ அனுமதி அளித்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதே நேரம் விதிமுறைகளை மீறும் கிரிக்கெட் வீரர்கள் மீது பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுக்கும் என்றும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் பிப்ரவரி 20ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
அடுத்ததாக பிப்ரவரி 23ஆம் தேதி பாகிஸ்தானையும் மார்ச் 2-ஆம் தேதி நியூசிலாந்தையும் எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது.
February 18, 2025 6:02 PM IST


